தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


[பொருள் என்பது உணவு போல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது - ஆனால் உணவு அளவுக்கு அதிகமானதால் இப்போது உலகமெங்கும் ஏற்பட்டுள்ள நோய்களையும், நலக்கேடுகளையும் காண்கிறோம். இதே போல் பணம், வசதி போன்றவையும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகி விடும் குமுக சூழல் உள்ளது. பொருளையும் செல்வத்தையும் வேண்டாம் என்று சொல்பவன் துறவி. போதும் என்று சொல்பவன் அறிஞன். வீரம் என்பது தீரச் செயல்கள் மட்டுமே அல்ல - தன் தேவையுடன் நுகர்ச்சியை நிறுத்திக் கொள்வதும் ஒரு மிகப் பெரிய குமுக வீரமே. கணவனும், மனைவியுமாய் வாய்ப்புக்கள் இருந்தும் பொருட் தேடலில் இருந்து விருப்பமுடன் வெளியேறி ஒரு தற்சார்புப் பாதையில் போவது அரிது. அவ்வாறு வெளியேறி நம்மிடையே அமைதியாய் இருக்கும் நாயகர்களை இனங்கண்டு கொள்ளும் முயற்சியாக இத்தொடர் உள்ளது.]

இம்மாத நாயகர் குடும்பத்தைச் சந்திப்பதற்காக, மீண்டும் கோவைக்கு மேற்கே சிறுவாணி சாலையில் பயணம், இம்மாத நாயகர் குடும்பத்தைச் சந்திப்பதற்காக. மனதிற்கு இதமான மேற்கு மலைத் தொடரின் பின்னணி, சாலைக்கு இரு மருங்கிலும், மஞ்சள், வாழைத் தோட்டங்கள், கமுகு மற்றும் தென்னந்தோப்புகள். மெல்லிய காற்று, முந்தைய நாள் பெய்த மழையின் ஈரத் தடங்கள் யாவும் ஒன்று சேர்ந்து நம்மை உவப்புறச் செய்கின்றன. இம்மாத நாயகர் தம்பதிகள் சிவகணேசன், அனிதா அவர்களின் தோட்டம் போளுவம்பட்டி கிராமத்திலிருந்து, செம்மேடு கிராமம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. ஒன்பது ஏக்கர் பண்ணையில் பல வித பயிர்களை விளைவிக்கிறார்கள். சிவகணேசனிடம், பண்ணையின் பயிர்த் திட்டத்தை பற்றிக் கேட்டோம். அவர், சுபாஷ் பாலேகர் அவர்களின் பண்ணை அமைப்பு முறையையொட்டி, தம் தோட்டத்தை அமைத்திருப்பதாகக் கூறினார்.

ஐந்தடுக்கு முறையில் அமைக்கப் பட்டுள்ள அத்தோட்டத்தில், தென்னை, பாக்கு, வாழை, மஞ்சள். சிறு காய்கறிப் பயிர்கள் ஆகியவை, ஒன்றன் நிழலில் மற்றொன்றாக வளர்ந்து வருகின்றன. தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப் பட்டிருக்கிறது. அவ்வட்டாரத்தில், யானை காட்டுப் பன்றி போன்ற காட்டு விலங்குகள் நடமாட்டம் இருப்பதால், அவ்வேலி அவசியமாகி விட்டது என்று சிவகணேசன் விளக்கினார். வேலியில் இருந்து நான்கு அடி தள்ளி தோட்டத்தின் எல்லை முழுவதும், சவுக்கு, மஹகோனி, இன்னும் பல வகையான் காட்டு மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. எந்த இடத்தில் எவ்வகையான மரங்கள் சிறந்த பயனளிக்கும் என்று ஆய்வு செய்து நட்டிருப்பதாக சிவகணேசன் கூறினார். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்ப்ட்ட பகுதியில் வருடத்தின் பல மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாய் உள்ளது. அது வாழை போன்ற பயிர்களை பாதிக்காமல் இருக்க அப்பகுதியில், சவுக்கு மரங்கள் காற்று அரணாக நடப்பட்டுள்ளன.

நடுவில் நடந்து செல்ல குறுக்கு நெடுக்காக இரு பாதைகள் உள்ளன. அப்பாதைகளின் ஓரங்களில், தேவையான இடைவெளி விட்டு, பல்வேறு வகையான, பூ மற்றும் பழ மரங்களை சிவகணேசன் வளர்த்து வருகிறார். அது குறித்து அவரிடம் வினவிய போது, அவர் "இன்னும் சில ஆண்டுகள் சென்ற பின் என் குழந்தைகளோ, அல்லது நம் விருந்தினர் குழந்தைகளோ இயற்கையோடு இயல்பாய் இணைய இம்மரங்கள் ஒரு பாலமாய் இருக்க கூடும். அவர்கள் அப்போது காணும் கனிகளைக் கொய்து உண்ணலாம், மலர்களைக் கண்டு மகிழலாம். மரங்களில் ஏறி விளையாடி மகிழ்வார்கள் என்ற நம்பிக்கை தான்" என்றார், சிறு புன்னகையுடன். சில இடங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாய், பூசணி பரங்கி சுரை போன்ற தரையில் படரும் கொடிகளைக் கண்டோம். அவை களைச்செடிகளை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுவது மட்டுமின்றி, தமக்கும் பண்ணையில் பணி புரியும் மக்களுக்கும் தினசரி சமையலுக்கும் காய் கொடுப்பதாய் அனிதா கூறினார்.

தோட்டத்தின் அறுதியில் ஒரு வெங்காயப் பட்டறை அமைக்கப் பட்டிருந்தது. அதற்கு அருகே நன்றாக திட்டமிடலுடன் அமைக்கப் பட்ட் பாத்திகளில் பலவித கீரைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படியே நடந்து அவர்கள் வீட்டருகே வந்தடைந்தோம். பெரிய கிணறு ஒன்று இவ்வயல்களுக்கு எல்லாம் தண்ணீர் ஆதாரமாய் இருப்பதை நாம் புரிந்து கொண்டோம். கிணற்றுக்கருகே ஒரு சிறு வயலில், வெண்டைச் செடிகள் இப்போது தான் கிளம்பியிருந்தன. நம் மனத்தில் தோன்றிய வினாவுக்கு, சிவகணேசன் விடையளித்தார். "கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் ஆய்வுக்காக அவ்விடத்தை ஒதுக்கியுள்ளோம். அவர்கள் வெண்டையில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப் படுத்த சிறந்த இயற்கை அரண் எது என்ற ஆய்வுக்காக இந்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்." நாம் கூர்ந்து கவனித்த போது அவரின் விளக்கம் புரிந்தது. ஒவ்வொரு பாத்தியைச் சுற்றியும், வெவ்வேறு சிறு பயிர்கள் நடவு செய்யப் பட்டிருந்தன. (கோழிக்கொண்டை, கேந்தி போன்ற பூச்சிகளை ஈர்க்கும் பயிர்கள்)

[பொருள் என்பது உணவு போல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது - ஆனால் உணவு அளவுக்கு அதிகமானதால் இப்போது உலகமெங்கும் ஏற்பட்டுள்ள நோய்களையும், நலக்கேடுகளையும் காண்கிறோம். இதே போல் பணம், வசதி போன்றவையும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகி விடும் குமுக சூழல் உள்ளது. பொருளையும் செல்வத்தையும் வேண்டாம் என்று சொல்பவன் துறவி. போதும் என்று சொல்பவன் அறிஞன். வீரம் என்பது தீரச் செயல்கள் மட்டுமே அல்ல - தன் தேவையுடன் நுகர்ச்சியை நிறுத்திக் கொள்வதும் ஒரு மிகப் பெரிய குமுக வீரமே. கணவனும், மனைவியுமாய் வாய்ப்புக்கள் இருந்தும் பொருட் தேடலில் இருந்து விருப்பமுடன் வெளியேறி ஒரு தற்சார்புப் பாதையில் போவது அரிது. அவ்வாறு வெளியேறி நம்மிடையே அமைதியாய் இருக்கும் நாயகர்களை இனங்கண்டு கொள்ளும் முயற்சியாக இத்தொடர் உள்ளது.]

இம்மாத நாயகர் குடும்பத்தைச் சந்திப்பதற்காக, மீண்டும் கோவைக்கு மேற்கே சிறுவாணி சாலையில் பயணம். மனதிற்கு இதமான மேற்கு மலைத் தொடரின் பின்னணி, சாலைக்கு இரு மருங்கிலும், மஞ்சள், வாழைத் தோட்டங்கள், கமுகு மற்றும் தென்னந்தோப்புகள். மெல்லிய காற்று, முந்தைய நாள் பெய்த மழையின் ஈரத் தடங்கள் யாவும் ஒன்று சேர்ந்து நம்மை உவப்புறச் செய்கின்றன.

இம்மாத நாயகர் தம்பதிகள் சிவகணேசன், அனிதா அவர்களின் தோட்டம் போளுவம்பட்டி கிராமத்திலிருந்து, செம்மேடு கிராமம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. ஒன்பது ஏக்கர் பண்ணையில் பல வித பயிர்களை விளைவிக்கிறார்கள். சிவகணேசனிடம், பண்ணையின் பயிர்த் திட்டத்தை பற்றிக் கேட்டோம். அவர், சுபாஷ் பாலேகர் அவர்களின் பண்ணை அமைப்பு முறையையொட்டி, தம் தோட்டத்தை அமைத்திருப்பதாகக் கூறினார். ஐந்தடுக்கு முறையில் அமைக்கப் பட்டுள்ள அத்தோட்டத்தில், தென்னை, பாக்கு, வாழை, மஞ்சள். சிறு காய்கறிப் பயிர்கள் ஆகியவை, ஒன்றன் நிழலில் மற்றொன்றாக வளர்ந்து வருகின்றன.

தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப் பட்டிருக்கிறது. அவ்வட்டாரத்தில், யானை காட்டுப் பன்றி போன்ற காட்டு விலங்குகள் நடமாட்டம் இருப்பதால், அவ்வேலி அவசியமாகி விட்டது என்று சிவகணேசன் விளக்கினார். வேலியில் இருந்து நான்கு அடி தள்ளி தோட்டத்தின் எல்லை முழுவதும், சவுக்கு, மஹகோனி, இன்னும் பல வகையான் காட்டு மரங்கள் நடப் பட்டிருக்கின்றன. எந்த இடத்தில் எவ்வகையான மரங்கள் சிறந்த பயனளிக்கும் என்று ஆய்வு செய்து நட்டிருப்பதாக சிவகணேசன் கூறினார். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்ப்ட்ட பகுதியில் வருடத்தின் பல மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாய் உள்ளது. அது வாழை போன்ற பயிர்களை பாதிக்காமல் இருக்க அப்பகுதியில், சவுக்கு மரங்கள் காற்று அரணாக நடப் பட்டுள்ளன.

நடுவில் நடந்து செல்ல குறுக்கு நெடுக்காக இரு பாதைகள் உள்ளன. அப்பாதைகளின் ஓரங்களில், தேவையான இடைவெளி விட்டு, பல்வேறு வகையான, பூ மற்றும் பழ மரங்களை சிவகணேசன் வளர்த்து வருகிறார். அது குறித்து அவரிடம் வினவிய போது, அவர் "இன்னும் சில ஆண்டுகள் சென்ற பின் என் குழந்தைகளோ, அல்லது நம் விருந்தினர் குழந்தைகளோ இயற்கையோடு இயல்பாய் இணைய இம்மரங்கள் ஒரு பாலமாய் இருக்க கூடும். அவர்கள் அப்போது காணும் கனிகளைக் கொய்து உண்ணலாம், மலர்களைக் கண்டு மகிழலாம். மரங்களில் ஏறி விளையாடி மகிழ்வார்கள் என்ற நம்பிக்கை தான்" என்றார், சிறு புன்னகையுடன்.

சில இடங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாய், பூசணி பரங்கி சுரை போன்ற தரையில் படரும் கொடிகளைக் கண்டோம். அவை களைச்செடிகளை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுவது மட்டுமின்றி, தமக்கும் பண்ணையில் பணி புரியும் மக்களுக்கும் தினசரி சமையலுக்கும் காய் கொடுப்பதாய் அனிதா கூறினார்.

தோட்டத்தின் அறுதியில் ஒரு வெங்காயப் பட்டறை அமைக்கப் பட்டிருந்தது. அதற்கு அருகே நன்றாக திட்டமிடலுடன் அமைக்கப் பட்ட் பாத்திகளில் பலவித கீரைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படியே நடந்து அவர்கள் வீட்டருகே வந்தடைந்தோம். பெரிய கிணறு ஒன்று இவ்வயல்களுக்கு எல்லாம் நீர் ஆதாரமாய் இருப்பதை நாம் புரிந்து கொண்டோம். கிணற்றுக்கருகே ஒரு சிறு வயலில், வெண்டைச் செடிகள் இப்போது தான் கிளம்பியிருந்தன. நம் மனத்தில் தோன்றிய வினாவுக்கு, சிவகணேசன் விடையளித்தார். "கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் ஆய்வுக்காக அவ்விடத்தை ஒதுக்கியுள்ளோம். அவர்கள் வெண்டையில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப் படுத்த சிறந்த இயற்கை அரண் எது என்ற ஆய்வுக்காக இந்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்." நாம் கூர்ந்து கவனித்த போது அவரின் விளக்கம் புரிந்தது. ஒவ்வொரு பாத்தியைச் சுற்றியும், வெவ்வேறு சிறு பயிர்கள் நடவு செய்யப் பட்டிருந்தன (கோழிக்கொண்டை, கேந்தி போன்ற பூச்சிகளை ஈர்க்கும் பயிர்கள்).

தோட்டச் சுற்றை முடித்து அவர் வீட்டருகில் வந்து அமர்ந்தோம். சிவகணேசனிடம் அவருடைய வேளாண்மை ஆர்வத்திற்கு முதல் படியாக இருந்தது எது என்று உரையாடலைத் துவங்கினோம். சிவகணேசன் ஒரு பாரம்பரிய வேளாண் குடும்பத்தைச் சார்ந்தவர். எனினும் அவர் தந்தை வேளாண்மையை முதல் தொழிலாகக் கொள்ளாமல், காவல்துறையில் பணி புரிந்தார். இதுவரை இத்தொடரில் நாம் கண்ட சில நண்பர்களை போலவே, சிவகணேசனும், கணிணித் துறையில் முதுனிலை பட்டம் பெற்று சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின் வழக்கமான காலச்சுழற்சியில் அமெரிக்காவுக்கு இட மாற்றமும் நிகழ்ந்தது. அனிதாவும், அமெரிக்காவில் பணியில் இருந்தார். இவர்கள் திருமணமும் இனிதே நடந்து, இரட்டைக் குழந்தைகள் பிற‌ந்தன (மகன் சூர்யா, மகள் மிதிலா). எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல, அவர்கள் வாழ்வில் பொருளாதார நிலையும் நன்றாக உயர்ந்தது.

குழந்தைகளும் வளர்ந்து அமெரிக்காவிலேயே பள்ளிக்குச் செல்ல துவங்கினர். சிவகணேசன் தமிழ் மீதுள்ள ஆர்வத்தினால், அவர்கள் குடியிருந்த வட்டாரத்தில் இயங்கி வந்த த‌மிழ்ச் சங்கத்தில் ஈடுபாட்டுடன் ஓய்வு நேர பணியாற்றத் தொடங்கினார். தமிழ்ச்சங்க நடவடிக்கைகளில் அவர் தீவிர பங்கெடுத்து, சங்கத்தில் உள்ள் எல்லா குழந்தைகளுக்கும் நல்ல தமிழ் பயிற்றுவிக்க வார இறுதி வகுப்புகள் நிறுவினார். ஆயினும், அதற்கு தமிழ் பெற்றோரிடம் இருந்து சரியான வரவேற்பு கிட்டவில்லை. பெரும்பாலோர் ஒரு மேம்போக்கான நிலைப்பாடு கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்கள் எண்ணம் குழந்தைகள் வெறுமனே தமிழில் உரையாடுவதே போதும் என்றிருந்தது. இது சிவகணேசனை பெரும் சிந்தனைக்குள்ளாக்கியது. தத்தம் தாய்மொழியின் மகத்துவத்தை பிள்ளைகள் உணராதிருப்பின், அவர்கட்கு எவ்வாறு நம் நாட்டின் தொன்று தொட்ட கலாச்சாரமும், நம் முன்னோர்களின் ஆழ்ந்த தேடல்களில் விளைந்த அற்புத இலக்கியங்களும் எவ்வாறு புரியும் என்று கவலை கொள்ளத்துவங்கினர் அனிதாவும் சிவகணேசனும்.

இவ்வெண்ண ஒட்டங்களின் விடையாக, அமெரிக்க வாழ்க்கை குழந்தைகளுக்கு உண்மையான மதிப்பீடுகளை அளிக்கும் வாய்ப்பு மிகக் குறைவே என்ற முடிவுக்கு வந்தனர். இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்துடனே, இங்குள்ள நகர வாழ்க்கை பற்றியும் பல ஐயங்கள் உருவாகத் தொடங்க, கிராம வாழ்வு தான் சரியான தீர்வு என்று அவர்கள் உணர்ந்தனர். அச்சமயத்திலேயே, மூதறிஞர் ஃபுகொகா

அவர்களின் "ஒற்றை வைக்கோல் புரட்சி" சிவகணேசனின் இயற்கைச் சிந்தனைப் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்தது. தம்பதியர், தாயகம் திரும்பும் ஆயத்தங்களில் இறங்கினர்.

மூன்று வருடம் முன்பு, நிலத்தில் முதலீடு செய்து, அடுத்த ஆண்டு அனிதா குழந்தைகளுடன் செம்மேடு கிராமத்துக்கு குடி பெயர்ந்தார். சிவகணேசன் மட்டும் சில காலம் அமெரிக்காவில் இருக்க, இங்கு தோட்ட வேலைகள் துவங்கின. நிலத்தை சீராக்கி, சமன் படுத்தி, வேலி அமைத்து வேளாண்மைக்கு ஆயத்தமாகிய பின், சிவகணேசனும் குடும்பத்துடன் இணைந்தார். கணவன் மனைவி இருவரும் சுபாஷ் பாலேகரின் இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொண்டனர். முழு மூச்சாய் வேளாண்மையில் இறங்கி விட்டனர்.

சிவகணேசனின் இயற்கை வேளாண்மைப் பற்று மிக ஆழமானது. தோட்டத்திற்கான திட்டமிடுதலில் அவரின் சிறப்பான தொலை நோக்கு நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அவர் நம் பிற்கால சந்ததிக்கு அளிக்கும் செல்வமே, நல்ல சுற்றுச் சூழலும் இயற்கையை புரிந்து அதனுடன் இயைந்து வாழக் கற்று கொடுத்தலுமே என்று உறுதியாக நம்புகிறார். நாம் பேசிக்கொண்டிருக்கையில், பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வீடு திரும்பினர். அவர்கள் வந்தவுடன், அங்கிருந்த கோழிகுகுஞ்சுகளுடனும், நாய்களுடனும் விளையாடிக் கொண்டிருந்த காட்சி, நமக்கு பேருவகை அளிப்பதாய் இருந்தது. இருள் சேரத் துவங்க, நாங்கள் காலக் கட்டாயத்தினால், இயற்கையை ஆராதிக்கும் அவ்வினிய குடும்பத்திடமிருந்து பிரியாவிடை பெற்று வீடு திரும்பினோம்.

[தொடர்பிற்கு : செம்மல் 9994447252; சிவகணேசன் 7695929277 ]

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org