தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


வெள்ளை நாரை

மழைக்காலம் என்றாலே நம் கவின்மிகு தமிழ்நாட்டில் இடம்பெயரும் பறவைகளைக் (migratory birds) காணலாம். அவ்வரிசையில், இம்மாதம் நாம் காணும் பறவை European White Stork என்று ஆங்கிலத்திலும், என்று Ciconia ciconia asiatica அறிவியலிலும் சொல்லப்படும் வெள்ளை நாரை. இது துருக்கிஸ்தானில் இனப் பெருக்கம் செய்து, பனிக்காலத்தில் ஈரான், இந்தியா போன்ற இடங்களுக்குப் பெயரும் ஒரு அழகிய பெரிய பறவை.

தோற்றம்:

சுமார் 4 அடி உயரம் (100 - 115 ) கொண்ட இப்பறவையின் பாதி உயரம் கால்களால் ஆனது. ஆண், பெண் இரண்டும் ஒன்றே போல் இருக்கும். கால்களும், நீண்ட அலகும் சிகப்பு நிறத்திலும், சிறகுகளின் நுனிப்பகுதி கருப்பு நிறத்திலும், உடல் பால் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

முழுக் கட்டுரை »

செவிக்கு உணவு இல்லாத போது


கேழ்வரகு அவல் இட்லி

கேழ்வரகு அவலை சுத்தம் செய்து வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது நல்லெண்ணெய் காயவைத்து சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.

பின் உளுத்த மாவை சிறிது சூட்டில் வறுத்து, பொடித்த கேழ்வரகு அவலை சேர்த்து, அடுப்பை அணைக்கவும். இந்த கலவை ஆறியதும் கடைந்த தயிர், உப்பு, வறுத்த வெங்காய கலவையை சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

1/2 மணி நேரத்திற்குப் பின் இட்லித்தட்டில் சிறிது எண்ணெய் தடவி, ஊறிய கேழ்வரகு அவல் கலவையை ஊற்றி பின் 10 நிமிடம் வேக வைக்கவும்.

முழுக் கட்டுரை »

வான மழை இல்லையென்றால் வாழ்வுண்டோ - கிருஷ்ணன் சுப்பிரமணியன்


‘'ரெயின் ரெயின் கோ அவே' என்று சொல்லித்தான் மழையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த மேற்கத்திய மோகத்தால் உருவான‌, ஏட்டுக் கல்வி வெறி கொண்ட சமுதாயம். அதிலே பிறந்து வளர்ந்தவன் நான். மழையைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகே வந்துள்ளதை நினைத்து வருத்தத்துடன் இந்தக் கட்டுரையை எழுத முற்படுகின்றேன்.

தீபாவளி என்றாலே வியாபாரம். அதற்கு மிகப்பெரிய தடை மழை. மதுரை போன்ற நகருக்குள் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு கடைத்தெருக்களை சுற்றி வருபவர்களுக்கு இது நன்றாகவே புரியும். நூறு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கும் பொருள், மழை வந்துவிடில் ஐம்பது ரூபாயாகக் குறைந்துவிடும். நட்டம் என்னமோ விற்பவனுக்கே. லாபம் என்னமோ நமக்கே. இதைத் தாண்டிப் பெரிதாக நான் என்னுடைய கல்லூரி நாட்களில் சிந்தித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

விளைபொருட்களின் இறுதி நிறத்தையும் மணத்தையும் மட்டுமே கண்டு நுகரும் நமக்கு, அதனை விளைவிக்க மழை என்று ஒன்று வேண்டும் என்ற அரிய தத்துவத்தை அவ்வப்போது நினைவூட்டவேண்டியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்த தீபாவளி வாரத்தில் சொந்த ஊரான மதுரையில் நிகழ்ந்தது. அரவிந்த் கண் மருத்துவமனை சிக்னல் அருகே சென்று கொண்டிருக்கும்போது ஒரு அழகிய அம்மா அழகான கொய்யாக் கனிகளை விற்றுக் கொண்டிருந்தாள்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org