தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஊனுடம்பு ஆலயம் - நாச்சாள்


விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாகும் கண்

பிரபஞ்சத்தின் படைப்பில் மனிதனுக்கு அழகு சேர்ப்பது, குறிப்பாக முகத்திலேயே அழகான பகுதி, எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் அடர்த்தியான‌ கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேலும் அதிகரிக்கும். உணர்வு உறுப்பைச் சார்ந்த கண்கள் நமது உடலின் கண்ணாடி.

ஆம், விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்து .002 நொடியில் படம் பிடித்து காட்டிடும் ஓர் அற்புத உறுப்பு தான் கண். இனிமையான காட்சிகளை நமக்களித்து நம்மை இளமையாக வைத்திருக்கும் இனிய உறுப்பு தான் கண். சுமார் 14 கோடி அணுக்கள் விழித் திரையில் வேலை செய்கின்றன. 13.7 கோடி ஒளி உணர் கம்பு சில்லுகள் (ROD CELLS) கருப்பு வெள்ளை பார்வையை ஈர்க்கின்றன‌. 70 லட்சம் கோன் சில்லுகள் (CONE CELLS) பல நிற‌ங்களின் பார்வையை ஈர்க்கின்றன‌. 'எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா' என்று பாரதி புகழ்ந்த இந்த வியத்தகு உலகை ரசிக்க கோடான கோடி கண்கள் வேண்டும். உடலின் ஒளியாய் இருப்பது கண் தான். எனவே நமது கண் தூய்மையாக இருந்தால் உடம்பு முழுவதும் ஒளி உள்ளதாய் இருக்கும். மனிதர்களின் ஞான நிலையை கண்கள் (தேஜஸ்) மூலம் அறியலாம்.

முழுக் கட்டுரை »

மீட்டுருவாக்கும் உயிர்ம வேளாண்மை - பரிதி


[ஆசிரியர் குறிப்பு: தொழில்நுட்பம் ஏற்படுத்தும் அழிவுகளுக்குத் தீர்வு மீண்டும் ஒரு புதிய தொழில்நுட்பம் என்று தொடர்பின்னலாய்த் தொழில்நுட்பமும் ,அறிவியலும் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், சூழல்கேட்டிற்கு எளிமையாகச் செயல் படுத்தக் கூடிய தீர்வு உயிர்ம வேளாண்மையே, அது நம் காலடியிலேயே இருக்கிறது என்ற ரோடேல் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.நாம் இழந்த வாழ்முறைகளை மீட்பதே மிகப்பெரும் மீட்டுருவாக்கமாகும். புதிதாய்த் தேடிச் செயல்படுத்த எதுவும் இல்லை‍ என்பதே உண்மை!]

வசதியுள்ள மனிதர்களின் செயல்பாடுகளால் நம் பூவுலகின் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வெளிப்படையாகத் தெரியவந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள மேல்தட்டு மக்கள் இப்போதே தம் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டாலும் இந்தத் தீய விளைவுகளை அனைத்து மக்களும் பிற உயிரினங்களும்பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து எதிர்கொள்ளவேண்டிவரும். ஆனால் வசதி படைத்தவர்கள் இப்போதும் தம் தவறுகளை உணர்ந்து திருந்தியபாடில்லை. மாறாக, அவர்கள் மேன்மேலும் நுகர்வை அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். ஏனெனில், சூழல் மாசுபடுவதால் நேரும் தீமைகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்குத் தம் பண வசதி, சொத்து, படிப்பு, பதவி ஆகியவை உதவும் என்பது அவர்களுடைய கணக்கு. உலக மக்களில் மிகச் சிலர் மிதமிஞ்சிய வசதியுடன் வாழ்வதால் ஆகப்பெரும்பாலான மக்கள் சொல்லவியலாத் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதற்குச் சாதகமான அரசியல் பொருளாதார முறைமையை மாற்றுவது தான் அடிப்படையான தீர்வாகும். அனைத்து உயிர்களையும் போற்றிக் காக்க வல்ல ஒப்புரவியப் பொருளாதார முறைமையை உலகெங்கும் நிறுவுவதற்காகப் போராடவேண்டியது அனைத்து மக்களின் - குறிப்பாக, வசதியும் வாய்ப்பும் மிக்கவர்களுடைய – கடமையும் பொறுப்புமாகும்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org