கேழ்வரகு அவல் இட்லி
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு அவல் - 1 கோப்பை
- உளுந்து மாவு - 4 தே கரண்டி
- புளித்த பசுந் தயிர் - 2 கோப்பை
- பச்சை மிளகாய் - 1
- வெங்காயம் சிறிது
- உப்பு, சீரகம் - தேவையான அளவு
- செக்கு நல்லெண்ணெய் - சிறிது
செய்முறை
கேழ்வரகு அவலை சுத்தம் செய்து வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது நல்லெண்ணெய் காயவைத்து சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் உளுத்த மாவை சிறிது சூட்டில் வறுத்து, பொடித்த கேழ்வரகு அவலை சேர்த்து, அடுப்பை அணைக்கவும். இந்த கலவை ஆறியதும் கடைந்த தயிர், உப்பு, வறுத்த வெங்காய கலவையை சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
1/2 மணி நேரத்திற்குப் பின் இட்லித்தட்டில் சிறிது எண்ணெய் தடவி, ஊறிய கேழ்வரகு அவல் கலவையை ஊற்றி பின் 10 நிமிடம் வேக வைக்கவும்.