தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

காணாங் கோழி


எளிதில் நம்மால் காண முடியாத பறவை. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இதன் குரலை வைத்து இவை இருக்கும் இடத்தை அறியலாம். ஒரு விதமான குவாக், குவாக் என்ற ஒலியுடன் நடமாடும். பெரும்பாலும் புதரில் இருப்பதால் மனிதர்கள் கண்களில் தென்ப‌டுவது மிகக் கடினம். அதனால்தானோ என்னவோ இது காணான்கோழி என்று பெயர் பெற்றது!

White-breasted Waterhen என்று ஆங்கிலத்திலும், Amaurornis phoenicurus என்ற வாயில் நுழையாத விஞ்ஞானப் பெயரும் உடையது.

முழுக் கட்டுரை »

செவிக்கு உணவு இல்லாத போது

அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி நன்கு பிசைந்து மெது மெதுப்பான உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். பின்பு அந்த உருண்டையை தரையில் வைத்து 8 – 10 நிமிடங்கள் வரை நன்கு மெது மெதுப்பாகும் வரை பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.

மேலும் படிக்க...»

 

சர்க்கரை - இனிப்பும் கசப்பும் - எம்.ஆர். ராஜகோபாலன்


சர்க்கரை என்கிற சொல்லைக் கேட்கும்போதே நம்மில் பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். நாம் சாப்பிடக்கூடிய இனிப்பான பண்டங்களையும், சாக்லேட்களையும், ச‌ர்பத் போன்ற குளிர் பானங்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம். இந்த சர்க்கரையின் சரித்திரம் பற்றியும் இதனால் விளைந்துள்ள சமுதாய மாற்றங்கள் - மனித இனத்தின் ஆரோக்கியம் எப்படியெல்லாம் பாதிப்படைகிறது என்பதையும் விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பே நியூகினி நாட்டில்தான் முதன் முதலாகக் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. மக்கள் கரும்பை அப்படியே கடித்து, அதன் சாற்றினை உறிஞ்சிவிட்டு சக்கையைத் துப்பி வந்தனர். அக்காலகட்டத்திலேயே கரும்பு ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டது. அந்நாட்டின் மதச்சடங்குகளின்போது சிரட்டைகளில் (தேங்காய்க் கொட்டாங்கச்சிகளில்) கரும்புச்சாறு வைக்கப்பட்டு இறைவனுக்குப் படைக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் சிறு கோக்காகோலா டின்கள் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுகின்றன!

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org