தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்

சென்னை மாகாண முதலமைச்சர் ரெட்டியார் உணவு மாநாட்டில் பேசும்போது “ஒரு மாகாணத்தில் மட்டுமே இரண்டரை முதல் மூன்று கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்கச் செய்யும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டியிருக்கிறது” என்று கூறினார். போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப்பின் ஏன் இந்த இக்கட்டான நிலை? இதற்கு யார் பொறுப்பு? அதே மாநாட்டில் பண்டித ஜவஹர்லால் நேருவும் பேசினார் :” அதிகப்படியான உணவஒ உற்பத்தி செய்வதுதான் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு. ஆனால் கடந்த காலத்தில் அந்த இலக்கை எட்டுவதற்காக போதிய கவனமோ உழைப்போ செலுத்தப் படவில்லை என்பது உண்மைதான்” என்று அவர் கூறினார்.

முழுக் கட்டுரை »

தலையங்கம்

நான்கு மாநிலங்களில் இம்மாதம் நடந்த தேர்தல் முடிவுகள் மக்களாட்சியின் வெற்றி என்றே கூற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பாமர மக்களுக்கு எதிரான கொள்கைகளும், செயல்களும், அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அளவில் கொதிப்படயச் செய்து விட்டன என்பது தெளிவாகிறது. பன்னாட்டுக் கும்பணிகளுக்கு நம்நாட்டைக் கூவிக் கூவி விற்று வருகிறது இந்த மத்திய அரசு. உழவர்களின் பிரச்சினைகள் எதையுமே கண்டு கொள்ளாமல் மன்சான்டோவிற்குக் குடை பிடித்து வரும் வேளாண் அமைச்சர் சரத் பவார் ஒரு புற‌ம். 6 விழுக்காட்டிற்கு மேல் மக்கள் வேளாண்மையில் ஈடு படக் கூடாது என்று தன் பொருளியல் மேதாவித்தனத்தைப் பறைசாற்றிக் கொள்ளும் நிதியமைச்சர் சிதம்பரம் ஒரு புறம். மரபீனி மாற்று விதைகள் போன்ற மிக முக்கிய தொழில்நுட்பத்தை வெளிநாட்டிலிருந்து காசு வாங்கிக் கொண்டு தொண்டு நிறுவனங்கள் உள்நோக்கத்துடன் தடுக்கின்றன என்று பேட்டி அளிக்கும் பிரதமர்.

மேலும் படிக்க...»

 

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org