தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்

மாடுகளின் இனப்பெருக்க மேலாண்மைக்கு நாம் முதலில் மாடுகளின் இனப்பெருக்கத்தைப் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். மாடுகள் ஒரு ஈற்றில் ஒரு கன்று தான் ஈனும். கிடேரிக் கன்றுகள் (பெண் கன்றுகள்) சுமார் இரண்டரை வயதில் முதலில் சினைப் பருவத்தை அடையும். சில கன்றுகளில் மூன்று வயது வரை ஆகலாம். அதற்கு மேலும் பருவத்திற்கு வரவில்லையானால் ஊட்டச் சத்து குறைவாக உள்ளது ஒரு காரணமாக இருக்கலாம். சினைக்கு வருவது என்றால் என்ன? பசுக்கள் பருவத்தை அடைந்ததிலிருந்து 21 நாட்களுக்கு ஒரு முறை கரு முட்டையை உற்பத்தி செய்யும். இதனை சினைப் பருவச் சுற்று என்று அழைக்கலாம்.

முழுக் கட்டுரை »

உழவர்களின் சிக்கல்கள் - பாமயன்

பொதுவாக வேளாண்மையில், குறிப்பாக இந்தியா போன்ற வேளாண்மையில் நீண்ட மரபுத் தொடர்ச்சியைக் கொண்ட நாடுகளின் தற்சார்பை சிதைப்பதன் மூலம் அரசியல் விடுதலை பெற்ற நாடுகளை மீண்டும் அடிமையாகக் கொள முடியும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் ரசாயன அதாவது வேதி உப்புக்களை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மைத் திட்டம் ஒன்றாகும்.. இந்தியா என்ற துணைக்கண்டம் ஆங்கிலேயரின் நுழைவிற்கு முன்பு பல நாடுகளாக இருந்தது. இதன் ஒவ்வொரு பகுதியும் பல மன்னர்களால் ஆட்சி செலுத்தப்பட்டு வந்தன. ஆங்கியேலர்கள் தங்கள் துப்பாக்கி முனையாலும், அரசியல் சூழ்ச்சிகளாலும்,..

மேலும் படிக்க...»

 

உழவன் விடுதலையும் சிறு தொழில்களும்


சென்ற கட்டுரையில் , உழவன் விடுதலைக்கும், உழவு ஒரு லாபகரமான தொழிலாக மாறுவதற்கும் கிராமப்புற அண்மைத் தொழில்கள் எவ்வாறு தேவை என்று பார்த்தோம். இக்கட்டுரையில், ஒரு நல்ல சிறுதொழிலுக்குத் தேவையான அங்கங்கள் என்ன, அவற்றை எவ்வாறு செயல் படுத்துவது என்று பார்ப்போம். அடிப்படையில் வெற்றிகரமான சிறுதொழிலுக்குக் கீழ்க்கண்ட 5 அம்சங்கள் தேவை.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org