தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து - நாச்சாள்

சிறுதானிய மசாலா ரொட்டி

தேவையான பொருட்கள்

 • நாட்டு கம்பு மாவு 1/4 கப்
 • ராகி மாவு 1/4 கப்
 • வரகு , சாமை , தினை, கோதுமை மாவு தலா 2 ஸ்பூன்
 • தேங்காய் கொப்பரை துருவல் 2 ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
 • கருப்பு எள்ளு 1/2 ஸ்பூன்
 • சீரகம் சிறிது
 • மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
 • பெருங்காயம் சிறிது
 • இந்து உப்பு
 • செக்கு கடலை எண்ணெய் (ரொட்டி சுட‌)

அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி நன்கு பிசைந்து மெது மெதுப்பான உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். பின்பு அந்த உருண்டையை தரையில் வைத்து 8 – 10 நிமிடங்கள் வரை நன்கு மெது மெதுப்பாகும் வரை பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை அப்படியே ஈரமான துணியில் சுற்றி அல்லது ஒரு பாத்திரத்தில் மூடியை உட்புறமாக நீரால் துடைத்து, மூடிவைக்கவும்.

குறைந்தது ஒருமணி நேரம் கழித்து, மாவை எடுத்து மீண்டும் அடித்துப் பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மாவு தோய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு (மிக மெல்லிதாக இடவரும்.) நிதானமான சூட்டில் தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சில துளிகள் எண்ணெய் விடவும். திருப்பிப் போட்டு விரும்பினால் இன்னும் சில துளிகள் எண்ணெய் விட்டு தோசைத் திருப்பியால் சுற்றி அழுத்திக் கொடுத்து திருப்பவும். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும், கல்லிலிருந்து எடுத்துப் பரிமாறலாம். சூடான சிறுதானிய ரொட்டி தயார். நாட்டு கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை போன்ற சிறுதானியங்கள் நார்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடியது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. இதை தனியாகவும் அல்லது கார சட்னி யுடனும் சாப்பிடலாம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org