தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


காணாங் கோழி

எளிதில் நம்மால் காண முடியாத பறவை. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இதன் குரலை வைத்து இவை இருக்கும் இடத்தை அறியலாம். ஒரு விதமான குவாக், குவாக் என்ற ஒலியுடன் நடமாடும். பெரும்பாலும் புதரில் இருப்பதால் மனிதர்கள் கண்களில் தென்ப‌டுவது மிகக் கடினம். அதனால்தானோ என்னவோ இது காணான்கோழி என்று பெயர் பெற்றது!

White-breasted Waterhen என்று ஆங்கிலத்திலும், Amaurornis phoenicurus என்ற வாயில் நுழையாத விஞ்ஞானப் பெயரும் உடையது.

தோற்றம்:

பார்ப்பதற்குச் சிறிதாகவும், மேல் பகுதி கருப்பாகவும், கீழ்ப்பகுதி வெள்ளை நிறத்திலும், மூக்கின் பின் பகுதியில் சிகப்பு நிறத்துடனும் இருக்கும். இடுப்பும், சிறு வாலும் சற்றுத் தூக்கலாக இருக்கும். நடக்கும் பொழுது முன்னும் பின்னும் அசைந்து நடக்கும்.

பழக்க வழக்கங்கள்

தண்ணீரில் நன்றாக நீந்தும். புழு, பூச்சிகள், சிலந்தி, நத்தை, சிறிய மீன்கள் ஆகியவற்றை உண்ணும். புதர்களில், வயல் ஓரங்களில், சிறிய காடுகளில் , குட்டைகளில் இவற்றைக் காணலாம்.

இனப்பெருக்கம்

கூட்டைத் தரையில்தான் கட்டும். 4-9 முட்டை பெண் இடும். ஆண் பெண் இருவருமே கூட்டை அமைப்பதிலும், அடை காப்பதிலும் ஈடுப‌டுவர். இனப்பெருக்க காலம் ஆனி முதல் புரட்டாசி வரை.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org