தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கவிதைப் பக்கம் - அர.செல்வமணி


விரைவில் எமக்கொரு விடைசொல் வீரே!


ஆடும் மயில்களில் அழகிருந் தென்ன

அவைதரும் தொல்லைக் களவே இல்லை

இயற்கையில் அவைகளுக் கெதிரிகள் ஆன

நரிகள் பூனைகள் நாட்டில் குறைய

மயில்கள் பெருகி மாநில மெங்கும்

உண்டு கொழுத்து உலவித் திரியுதே

எலிகளின் தொல்லை இல்லா திருக்கப்

பாம்புகள் உதவிப் பயிர்களைக் காத்தன

மயில்கள் பெருகப் பாம்புகள் மடிந்தன

இயற்கைச் சமநிலை இல்லா தழிந்து

ஓரினம் பெருகி உழவரை வாட்டுதே

நாளெலாம் உழைத்து நட்ட விதைகளை

மயில்களும் எலிகளும் மனம்போல் உண்ணும்

விதைகளை அவையும் விழுங்கா திருக்க

விரட்டினும் பெரிதாய் விடிவொன் றில்லை

காய்கறி பழங்களும் கனிந்த தவசமும்

விளையுமுன் மயில்கள் வீழ்த்தி நின்றால்

இயற்கைச் சீற்றமும் இடர்களும் மிகுந்தே

உழவர் நிலைதான் உயர்வதும் என்றோ

மயில்கள் உண்ணாப் பயிர்களும் உண்டோ

மண்ணைத் தின்றினி மாந்தர் வாழ்வதோ

விரைவில் எமக்கொரு விடைசொல் வீரே

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org