தற்சார்பு இயக்கம்

  தற்சார்பு இயக்கம் என்பது தன்னார்வலர்களால் , லாப நோக்கற்று நடத்தப் படும் ஒரு இயக்கம். இறுக்கமும் , பொய்யும் சூழ்ந்த நவீன வாழ்முறையெனும் பாலைவனத்தில் தற்சார்பான மாற்று வாழ்முறையில் ஆங்காங்கே பாலைவனச் சோலைகளைத் தேடும் முய‌ற்சியில் ஈடுபட்டுள்ளோம். தற்சார்பு இயக்கம் தமிழ்நாட்டில் செயல் படுகிறது. சூழல் மீட்பு, இயற்கை வேளாண்மை, பாதுகாப்பான உணவு, இயற்கைப் பருத்தி உடை, மண் வீடு கட்டுதல் போன்ற தற்சார்பு வாழ்வியலின் பல்வேறு அங்கங்களில் விடைகளைத் தேடும் முனைவில் நாம் ஈடுபட்டுள்ளோம். காந்தி, குமரப்பா, சூ மாக்கர், தோரோ, டால்ஸ்டாய் போன்றோரின் கருத்துக்களால் பெரிதும் உந்தப்படும் நம் இயக்கம் முற்றிலும் தன்னார்வலர்களால் நடத்தப் பட்டு வருகிறது.

  Tharchaarbu Iyakkam, which in Tamil means "a movement for self-reliance", is an unstructured , not-for-profit, volunteer managed movement based in TamilNadu , India. Tharchaarbu Iyakkam aims to deeply inquire (and find answers where we can) into all aspects of an alternate lifestyle - an alternative where lifestyle choices result in a meaningful life.

  We have been deeply influenced by the ideas of Gandhi, J.C.Kumarappa, E.F.Schumacher, Thoreau and Tolstoy among others. தற்சார்பு இயக்கத்தின் திட்டப்பணிகளில் சில‌

  Some of Tharchaarbu Iyakkam's projects

  1. தாளாண்மை - Thalanmai
  தற்சார்பு இயக்கம், ஒவ்வொரு தமிழ் மாதமும் , தாளாண்மை மலர்கிறது என்னும் பெயரில் விளம்பரங்கள் அற்ற ஒரு இதழ் வெளியிடுகிறது. இயற்கை வேளாண்மை, சூழல் மீட்பு, சுரண்டல்களைப் பற்றிய விழிப்புணர்வு, இயற்கை சார் தற்சாற்பு வாழ்விற்கான கலை, அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றைப் பற்றிய ஆய்வு மற்றும் களப் பரிசோதனைகள், தற்சார்பு வாழ்வியலில் வென்ற வழிகாட்டிகளின் எழுத்துக்கள் போன்றவற்றைத் தாளாண்மை பிரசுரிக்கிறது. இது வரை வெளிவந்துள்ள 20க்கும் மேற்பட்ட இதழ்களை வலைப்பூவில் படிக்க:

  தாளாண்மை மலர்கிறது - வலைப்பூவில்

  Our flagship project which is a monthly magazine in Tamil promoting organic and sustainable agriculture, safe food, earth construction, exposing exploitation and propagation of ideas related to a sustainable and eco-friendly living. We have published over 20 issues and they are available online for all to read

  Thalanmai Online

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org