நீரின்றி அமையாது உலகு! பகுதி 1 - சிக்கல்கள்


“மக்கள் ஓலிப் பண்டிகையைக் குதூகலமாகக் கொண்டாடவேண்டும். தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை!” - கபில் மிசுரா, தண்ணீர் அமைச்சர், டெல்லி மாநில அரசு மிகக் கடுமையான வறட்சியின் பிடியில் நாம் சிக்கியுள்ளோம். உலக அளவில் சுமார் 110 கோடி மக்களுக்குத் தூய குடிநீர் கிடைப்பதில்லை. குறைந்த வருமானத்தில் உயிர்வாழ்கிற பல கோடிக் குடும்பங்கள் தம் சொற்ப வருமானத்தில் கணிசமான பங்கினை மிகக் குறைந்த அளவு (எ.கா. ஐம்பது லிட்டர்) தண்ணீரை வாங்குவதற்குச் செலவிடுகின்றன; லிட்டருக்கு ஒரு ரூபாய் கொடுத்துத் தண்ணீர் வாங்கவேண்டிய நிலையில் கோடிக் கணக்கான இந்தியக் குடும்பங்கள் உள்ளன! உலகில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2000 குழந்தைகள் (ஓராண்டில் ஏழு லட்சத்து அறுபதாயிரம் குழந்தைகள்) மாசடைந்த தண்ணீரை அருந்துவதன் விளைவாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுச் சாகின்றனர். குழாயடிச் சண்டைகள் வன்முறைக் கலவரங்களாக வெடிக்கின்றன. மகாராட்டிர மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் உள்ள லாட்டூர் மாவட்டத்தில் ஆட்சியர் “144 தடை ஆணை” பிறப்பித்துள்ளார்: குறிப்பிட்ட இருபது தண்ணீர்த் தொட்டிகளுக்கு அருகில் ஒரு சமயத்தில் ஐந்து பேருக்கு மேல் கூட்டமாக நிற்பது சட்டப்படி குற்றம் என்கிறது அந்த ஆணை! கடந்த ஆண்டு லாட்டூர் நகர மக்களுக்கு முதலில் பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டது; பின்னர் அது மாதமொரு முறையாகக் குறைக்கப்பட்டது! வறட்சியிலும் மிக அதிகமான கரும்பு விளைச்சல்! 2012-13-க்குப் பின்னர் இரண்டாவது முறையாக மராத்வாடா பகுதியில் வறட்சி தாக்கியுள்ளது.

ஆனால், மராத்வாடா உள்ளிட்ட பகுதிகளில் 2014-15-இல் மிக அதிக அளவு கரும்பு விளைவிக்கப்பட்டது. மகாராட்டிர மாநிலத்தின் விளைநிலப் பரப்பில் வெறும் நான்கு விழுக்காடு நிலங்களில் மட்டும் கரும்பு பயிரிடப்படுகிறது. ஆனால், மொத்தப் பாசன நீரில் எழுபது விழுக்காடு கரும்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. அடுத்தடுத்து அம்மாநிலத்தை ஆண்ட, ஆளுகின்ற அரசுகள் இது குறித்து அதிகம் கவலைப்படவில்லை. கரும்பாலை உரிமையாளர்களும் பெரிய அரசியல்வாணர்களும் மிக நெருங்கிய உறவு கொண்டிருப்பதுதான் இந்த முரணான, சோகமான நிலைமைக்குக் காரணம். அரசு கரும்பாலைகளுக்கு மிகப் பெரிய அளவில் நல்கைகளையும் கடன் தள்ளுபடிகளையும் தருகிறது. அதுபோலவே, உழவர்களும் கரும்பு பயிரிடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். உலக அளவிலும் இந்தியாவிலும் தண்ணீர்ப் பயன்பாடு நாம் பயன்படுத்தும் தண்ணீர் புறப்பரப்பு நீர், நிலத்தடி நீர் என இரண்டு வழிகளில் கிடைக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் தண்ணீரின் ஆண்டுச் சராசரி அளவு (ஆளொருவருக்கு) முப்பது லட்சம் லிட்டர்களில் இருந்து பத்து லட்சம் லிட்டர்களாக வீழ்ந்துவிட்டது. உலகச் சராசரி அறுபது லட்சம் லிட்டர்கள்.

முழுக் கட்டுரை »

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


சாம்பல் உப்புக்கொத்தி

Grey Plover (Pluvialis Squatarola)

தோற்றம்

இவை 27 முதல் 30 செ.மீ நீளம் உடையவை. இளவேனில் மற்றும் கோடை காலங்களில் முகம், கழுத்து கருமை நிறத்தில் இருக்கும். உடம்பில் வயிற்றுப் பகுதி வரை கருமை நிறத்தில் இருக்கும். மற்ற மாதங்களில் அடிப்பகுதி வெளுப்பாக இருக்கும். தலையின் மேற்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும்.உடம்பின் அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறகுகள் வெள்ளை நிறத்தில் கரும் புள்ளிகளுடன் சிறகுகளின் நுனிகள் கருமை நிறத்தில் இருக்கும். மூக்கும், காலும் கருமை நிறத்தில் இருக்கும். இனப்பெருக்கக் காலங்களில் உடலில் உள்ள கருமை நிறம் மாறிக்கொண்டே இருக்கும்.

காணும் இடம்

இவை வலசை போகும் பறவைகள். இவை கனடா, ரஷ்யா, அலாஸ்கா போன்ற குளிர் நாடுகளைச் சார்ந்த பறவை. குளிர்காலங்களில் இவை கடற்கரை அதிகம் உள்ள நாடுகளுக்கு வலசை போகும் . இந்தியா, அந்தமான், இலச்சதீவு, இலங்கை போன்ற நாடுகளின் கடலோரப் பகுதிகளில் அதிகம் காணலாம். (நாம் இவற்றைக் கண்டது தனுஷ்கோடியில்).

முழுக் கட்டுரை »

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


உடல்நல‌ தோசை


1.பாசி பருப்பு - 1 கோப்பை
2.பாசி பயறு - 1 கோப்பை
3.கம்பு - 1 கோப்பை
4.வரகு/தினை- 1/4 கோப்பை
5.பச்சை மிளகாய் - 5
6.சீரகம் - 1 ஸ்பூன்
7.இஞ்சி - சிறிய துண்டு
8.முட்டைக்கோஸ் - 2 கோப்பை (துருவியது)
9.பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
10.கருவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
11.எண்ணெய் - தேவையான அளவு
12.உப்பு - தேவையான அளவு

செய்முறை

பாசி பருப்பு , பாசி பயறு , கம்பு , வரகு/தினை ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து 3 முதல் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org