தலையங்கம்


யாருக்கு வாக்களிப்பது?

நம் மாநிலத் தேர்தல் நெருங்கி விட்டது. அடுத்த இதழ் வரும்பொழுது தேர்தல் முடிவுகளும், யார் நம்மை அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சுரண்டப் போகிறார்கள் என்பதும் தெளிவாகி விடும். முன் செல்லும் பாதையைப் பார்க்கும் முன் நாம் கடந்து வந்தவற்றை நினைவு கூறுவது நன்று. சுதந்திரத்திற்குப் பின் உள்ள தமிழக வரலாற்றைப் பார்த்தால், ஆட்சி மாற்றம், கட்சிகளின் வளர்ச்சி போன்றவை பாமர மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியே உருவாகி உள்ளன. அறிவு பூர்வமான வேட்கை அல்லது தீர்வு என்பது முற்றிலும் இல்லை. முதலில் வெள்ளையனை விரட்டியடிக்க உருவான காங்கிரஸ், பின்னர் தானே ஒரு பதவிப் பிசாசாக உருமாறியது. மேட்டுக் குடிகளின் அராஜகத்தைத் தட்டிக் கேட்க எழுந்த பெரியாரின் நேர்மையான திராவிட இயக்கத்தின் முதுகில் சவாரி செய்து திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்து, தமிழ் மக்களைப் பிற இந்தியர்க‌ளிடம் இருந்து அந்நியமாக்கி அப்பாவி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுப் பதவிக்கு வந்தது. சினிமா என்னும் மகுடிக்கு மக்கள் மயங்குவதை நன்கு பயன்படுத்திக் கொண்ட தி.மு.க எம்.ஜி.ஆரை வளர்த்து அவரைப் பந்தயக் குதிரை ஆக்கிப் பல காலம் ஆட்சியில் இருந்தது.

தமிழ் நாட்டில் ஊழலை நிறுவனப் படுத்தியது தி.மு.க தான். அதுவரை இலை மறைவு காய் மறைவாக இருந்த ஊழல் வெளிப்படையாக, வெட்கமற்று, மட்டற்று இயங்கியதற்கு அக்கட்சியே காரணம். அதன் பின் வந்த அ.தி,மு.க எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த வரை ஆட்சியில் இருந்தது. தி.மு.க வை விட எந்தவித மாற்றுக் கொள்கையும் இல்லாமல், என் திரைப்படப் பாடல்களே என் கொள்கைகள் என்று எம்.ஜி.ஆர் கூறும் அளவு கொள்கை ஏதும் இன்றி, வெறும் தனி மனிதக் கவர்ச்சியிலேயே பலமுறை ஆட்சியில் இருந்தது.

முழுக் கட்டுரை »

குமரப்பாவிடம் கேட்போம் -பாபுஜி


(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

குறுகிய காலத்தில் செய்யவேண்டியவை

குறுகிய காலத்தில் நாம் எடுக்கவேண்டிய சில நடவடிக்கைகளை இப்போது பார்ப்போம்.

உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அவர்களின் விளைபொருட்களை அரசின் கொள்முதல் கட்டாயங்களிலிருந்து விடுவிப்பது…சிறு உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்) தங்களின் உணவுத்தேவை போக (தானியங்களின் அடிப்படையிலான உணவுமுறை) தலைக்கு நாளொன்றுக்கு 16 ஔன்சுக்கு மேலே உற்பத்தி செய்வதை மட்டுமே அரசின் கொள்முதல் கோட்பாடுகள் தங்களின் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள கொள்முதல் கோட்பாடுகள் சிறு உற்பத்தியாளர்களை சாறு பிழிந்தும், பெரு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதால்தான் பெரு உற்பத்தியாளர்கள் தப்பித்து விடுகின்றனர். இவ்வாறு தப்பித்தவர்கள் தம் விளைபொருட்களை (கொள்முதல் போக மிஞ்சியவை) கருப்புச்சந்தையில் கொள்ளை லாபத்திற்கு விற்று நாடு முழுவதும் ஊழல் உற்பத்தியாகும் நிலமாக மாற்றிவிடுகின்றனர்.

நம் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க நம் அரசு செய்யும் செலவும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வரலாறு காணாத அளவில் வந்தவண்ணம் இருக்கும் அகதிகளுக்கு செய்யும் செலவும் நம் சமுதாயத்தின் மீதான ஒட்டுண்ணிகளின் அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளன. இந்த அழுத்தம், சுமை, குறையவேண்டுமேன்றால் இவ்விரு குழுக்களும் உட்பத்தியாளர்களாக மாறவேண்டும். நம் ராணுவம் யுத்தகாலம் தவிர மற்ற காலங்களில் தன் சொந்த உணவுத்தேவையை தானே உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அதுபோலவே அகதிகளும் தங்களுக்குதேவையான உணவை தாங்களே உற்பத்தி செய்யும் வகையில், அதாவது உற்பத்தியாளர்களாக மாறி ஒட்டுண்ணி நிலையிலிருந்து விடுபடவேண்டும். பெரு நகரங்களில் அவர்களுக்கு பெட்டிக்கடைகள் வைத்துகொடுத்து அதன் மூலம் வெளிநாட்டுப்பபொருட்களை அவர்கள் விற்பனை செய்து பிழைப்பதை உடனே நிறுத்தவேண்டும்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org