வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


சாம்பல் உப்புக்கொத்தி

Grey Plover (Pluvialis Squatarola)

தோற்றம்

இவை 27 முதல் 30 செ.மீ நீளம் உடையவை. இளவேனில் மற்றும் கோடை காலங்களில் முகம், கழுத்து கருமை நிறத்தில் இருக்கும். உடம்பில் வயிற்றுப் பகுதி வரை கருமை நிறத்தில் இருக்கும். மற்ற மாதங்களில் அடிப்பகுதி வெளுப்பாக இருக்கும். தலையின் மேற்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும்.உடம்பின் அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறகுகள் வெள்ளை நிறத்தில் கரும் புள்ளிகளுடன் சிறகுகளின் நுனிகள் கருமை நிறத்தில் இருக்கும். மூக்கும், காலும் கருமை நிறத்தில் இருக்கும். இனப்பெருக்கக் காலங்களில் உடலில் உள்ள கருமை நிறம் மாறிக்கொண்டே இருக்கும்.

காணும் இடம்

இவை வலசை போகும் பறவைகள். இவை கனடா, ரஷ்யா, அலாஸ்கா போன்ற குளிர் நாடுகளைச் சார்ந்த பறவை. குளிர்காலங்களில் இவை கடற்கரை அதிகம் உள்ள நாடுகளுக்கு வலசை போகும் . இந்தியா, அந்தமான், இலச்சதீவு, இலங்கை போன்ற நாடுகளின் கடலோரப் பகுதிகளில் அதிகம் காணலாம். (நாம் இவற்றைக் கண்டது தனுஷ்கோடியில்).

உணவு

நத்தை, நண்டு, புழுக்கள், பூச்சிகள். பூமிக்குள் துளை போட்டுக் கொத்திக் கொத்தி உண்ணும்.

இனப்பெருக்கம்

கோடை காலங்களில் இவை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். சித்திரை முதல் ஆனி வரை. 4 முட்டைகள் இடும். அடைகாக்கும் நாட்கள் 26 முதல் 27 வரை ஆகும். 45 நாட்களுக்குள் குஞ்சுகள் பறக்க ஆரம்பித்துவிடும்.

குறிப்பு

அதிக அலைகள் இல்லாத கடலோரப் பகுதிகளில்தான் இவற்றைக் காணலாம். தன் நிறத்தை இனப்பெருக்க காலங்களில் மாற்றிக் கொள்வதால் அடையாளம் கண்டுகொள்வது கடினம். கூட்டமாக வலசை போனாலும் கடலோரப் பகுதிகளில் தனித்தனியாகக் காணலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org