செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


உடல்நல‌ தோசை


1.பாசி பருப்பு - 1 கோப்பை
2.பாசி பயறு - 1 கோப்பை
3.கம்பு - 1 கோப்பை
4.வரகு/தினை- 1/4 கோப்பை
5.பச்சை மிளகாய் - 5
6.சீரகம் - 1 ஸ்பூன்
7.இஞ்சி - சிறிய துண்டு
8.முட்டைக்கோஸ் - 2 கோப்பை (துருவியது)
9.பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
10.கருவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
11.எண்ணெய் - தேவையான அளவு
12.உப்பு - தேவையான அளவு

செய்முறை

பாசி பருப்பு , பாசி பயறு , கம்பு , வரகு/தினை ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து 3 முதல் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.

பிறகு இதனுடன் மிளகாய், சீரகம், இஞ்சி சேர்த்து அதிகம் நீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், கோஸ் சேர்க்கும் போது சிறிது நீர் விடும் அதனால் இப்போது தண்ணீர் அளவாக சேர்க்க வேண்டும்.

அரைத்த மாவுடன் உப்பு , வெங்காயம் , கோஸ், கருவேப்பில்லை சேர்த்து நன்கு கலக்கவும்(அடை மாவு பதம்)

தோசைக் கல்லில் வார்த்து எடுக்கவும். இதற்கு அதிகம் எண்ணெய் தேவை படாது. 1/2 தேக்கரண்டி அளவு எண்ணெய் ஒரு தோசைக்கு ஊற்றினால் போதுமானது.

இஞ்சிக்கு பதிலாக சுக்கு பொடி சேர்க்கலாம்.

பச்சை மிளகாய் பிடிக்காதவர்கள் வர மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org