தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


ஆம் ஆத்மி கட்சி , உண்மையில் எளிய மக்களின் கட்சியாக எதிர்பார்க்கப் படுகிறது. இன்று அங்கிங்கு எனாதபடி எங்கும் ஊடுருவி நிற்கும் ஊழலை எதிர்க்க ஒரு இயக்கமாகத் துவங்கி, அதன் பின் வெளியில் இருந்து எதிர்ப்பதை விட உள்ளிருந்து சுத்தம் செய்வது எளிது என்று ஒரு அரசியல் கட்சியாக வடிவம் எடுத்தது. முதலில் டில்லியில் 28 இடங்களில் வென்றதும் அதன் பின்னர் தற்போது 67 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளதும் அரசியல் வரலாற்றில் மிகவும் புரட்சிகரமான புதுமைகள்.

சென்ற ஆண்டு பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் வென்றதற்கும் அதன் பின்னர் டில்லியில் ஆம் ஆத்மி வென்றதற்கும் மிக நுட்பமான வேறுபாடு ஒன்று உள்ளது. பாரதிய ஜனதா பெரும் பணவலுவுடன் ஊடகங்களை ஊடுருவல் செய்து, அவற்றை விளம்பரங்கள் மூலம் குத்தகைக்கு எடுத்து மோடியைத் தவிர யாருமே திரையில் தெரியாத அளவில் 10,000 கோடி ரூபாய் செலவில் பாமர மக்களை ஓயாத மூளைச் சல‌வை செய்து வென்றது. ஆனால் ஆம் ஆத்மிக் கட்சி, மிகக் குறைந்த பணவலுவுடன், மக்களால் ஒரு தீர்வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.

முழுக் கட்டுரை »

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


ஒரு அரசையும், அது ஆளப் போகும் மக்களையும், அவர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என்றும் திட்டமிடும் போது பற்பல கேள்விகள் நம்முன் நிற்கின்றன. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சியான இந்தியாவில் எண்ணற்ற பிரிவினைகளும், எதிரும், புதிருமான தேவைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தை ஒரு குறிப்பிட்ட கொள்கையால் நிர்வாகம் செய்து விடலாம் என்பது இயலாத எதிர்பார்ப்பே. எனினும், உலகெங்கிலும், எல்லாப் பிரிவினைகளையும் தாண்டி, இன, மத,நிற, மொழி வேறுபாடுகளைக் கடந்து, நாகரிக மனிதர்கள் என்று சொல்லக்கூடிய அனைவருக்கும், நாடுகள் என்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பூகோளப் பகுதிகளுக்கும் ஒரே ஒரு அடிப்படைக் கொள்கை இழையூடி நிற்கிறது.

அதுதான் பணம். உண்மையில் புத்தர், ஏசு, அல்லா, ராமர் என்பது எல்லாம் வெளிமயக்கே; நவீன மனிதனின் முழுமுதற் கடவுளும், மதமும் பணம் மட்டுமே. பொருளாதார முன்னேற்றமே எல்லா அரசுகளின் முக்கியக் கொள்கையாக இருக்கிறது. எனவே பொருளாதாரக் கொள்கையும், அதன் விளைவாகத் தீட்டப் படும் செயற்திட்டங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. பொருளாதார முன்னேற்றம் என்று நாகரிகமாகச் சொல்வது முடிவில் பணத்தையும், தங்கத்தையும் அதிக அளவில் பதுக்குவதும், திரை கடலோடித் திரவியம் தேடுவதுமாக முடிகிறது.

முழுக் கட்டுரை »

குமரப்பாவிடம் கேட்போம்


திட்டமிடுவதன் நோக்கம் மக்கள்திரளின் வருவாயை உயர்த்துவதே என்று பலமுறை நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. தெரிந்த விஷயம்தான். ஆனால் அதை எவ்வாறு செய்வது என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. தனிநபர் வரும்படி மூன்று அல்லது நான்கு மடங்கு உயரவேண்டும் என்று விரும்புவது நியாயமானதே. ஆனால் விருப்பங்களெல்லாம் குதிரைகளல்ல, ஏறிச் சவாரி செய்வதற்கு! எந்த ஒரு குழுவின் வரும்படியை உயர்த்த நினைக்கிறோமோ, அந்த குழுவின் பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டாக வேண்டும்.

அதிகமான மக்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் விடமுடியாது. இதற்காக நாம் திட்டமிட வேண்டும். திட்டத்தை கிராமத்திலிருந்து தொடங்கவேண்டும். எனவே நமது முதல் நோக்கம் கிராம மக்களின் வேலைக்கு திட்டமிடுவது. காப்பியடிப்பது திட்டமிடுவதாகாது. ஒரு குறிப்பிட்ட நிலையில் பொருத்தமானது வேறொரு இடத்திற்குப் பொருந்தாது. வறுமையைத் தீர்க்க மாயமந்திரம் ஏதுமில்லை. தீர்வைக் கண்டடைய நாம் கிராம மக்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

முழுக் கட்டுரை »

தோரோ பக்கம் - சாட்சி


[தோரோ எழுதிய வால்டன் என்ற நூலில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டது. 160 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கவின் பாஸ்டன் நகர‌ம் மற்றும் மாசசூசட்சு மாநிலம், அன்றைய அமெரிக்காவின் கலாசாரத் தலைநகரமாய் இருந்தது. பாஸ்டன் அந்தணர்கள் (Boston Brahmins) என்று அங்குள்ள மேட்டுக் குடியினரைக் கூறுவர். அவர்களிடையே உடையும் நாகரிகமும் மிக இன்றியமையாதவையாக இருந்தன. அச்சூழலில் தோரோ எழுதிய இக்கருத்து அக்காலத்தில் பெரும் புரட்சிகரமாகவும், சினமூட்டுவதாகவும் இருந்தது.]

உடையைப் பொருத்தவரை, நம்முன் இருக்கும் கேள்விக்கு நேரடியாக வருவோமேயானால், நாம் உடைகள் வாங்க முற்படுவதே அவற்றில் உள்ள புதுமைக்கும், பிறர் நம்மை மதிக்க வேண்டுமே என்ற உந்துதலாலுமே; அவற்றின் தேவை இருக்கிறது என்பதால் அல்ல. புதிதாக ஒரு வேலை செய்ய முற்படுபவர்கள், உடையணிவதன் நோக்கம் முதலில் நம்மைக் குளிரில் இருந்து பாதுகாப்பதற்கும், அதன் பின்னர், இப்போது சமூகம் இருக்கும் நிலையில், நம் நிர்வாணத்தைக் காப்பதற்குமே என்று முதலில் உணர வேண்டும்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org