தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையிலாத‌தோர் கூடு - ஜெய்சங்கர்

இந்த மாதம் செலவு கணக்கு பார்க்க வேணுமல்லவா… அதற்கு முன்னால் வீட்டின் அளவு தெரிய வேண்டுமே… நமது வீடு மொத்தம் சுமாராக 1660 சதுர அடி. இது வெளிக்கூடு. மூன்று திண்ணைகளையும் சேர்த்தது. உள் கூடு (திண்ணைகளையும் சேர்த்து) சுமார் 1330 சதுர அடி. மொத்த செலவு 16,90,000 ரூபாய். அப்படியானால், சதுர அடிக்கு ஆன செலவு ரூபாய் 1020. இதில் வீட்டின் எல்லா செலவுகளும் அடக்கம். கதவுகள், சாளரங்கள், வண்ணப் பூச்சு ஆகிய எல்லாம் அடக்கம். வடிவமைப்புச் செலவும் இதில் அடங்கும். சூரிய ஒளிக் கண்ணாடி(Solar Panels), மின்கலம்(Battery), விளக்குகள், குழாய்கள், தண்ணீர் பைப்புகள் ஆகியவற்றை சேர்க்கவில்லை. சுவற்றின் உள்ளே மின் இழைகள் (Wires), பைப்புகள் ஆகியவற்றை வைக்காமல், வெளியே தெரிவது போல்தான் பதிக்கப் போவதால் அதற்கு அதிக செலவு பிடிக்காது என்று எண்ணுகிறேன்.

சென்னையில், இப்போது ஒரு சாதாரண வீட்டைக் கட்ட, குறைந்த பட்சம் சதுர அடிக்கு 1500 ரூபாய் ஆகிறது என்கின்றனர். அதுவும் நாமே வேலைகளையும், வேலையாட்களையும் மேற்பார்வை செய்தால் மட்டுமே இந்த அளவில் செலவு இருக்கும். பொதுவாக கட்டுமானக் கம்பெனிகளின் மூலம் கட்டினால் சதுர அடிக்கு 2000 ரூபாய் ஆகிறது. சென்னை போன்ற நகரங்களை விட இங்கு, பண்ணையில் கட்டிட வேலை ஆட்களின் சம்பளம் சற்று குறைவு. சுமார் 30 விழுக்காடு கொத்தனார்களுக்கும், 25 விழுக்காடு வேலையாட்களுக்கும் சம்பளம் குறைவு.

முழுக் கட்டுரை »

கிராமிய வாழ்வாதாரங்கள் - ராம்

நமது கிராமத்து மக்களுக்கு தங்கள் வாழ்க்கைக்கு பொதுவாக தேவைப்படும் பெரும்பாலான திறன்கள் ஏற்கனவே உள்ளன. இவற்றைப் பெறுவதற்கு நமது மக்கள் எந்த விதமான பயிலரங்கோ, பள்ளியோ செல்லவில்லை; பெரிதாக எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. நமது இன்றைய பாடத்திட்டத்தையும் மீறித்தான் நமது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்தத் தேவையான பல வித்தைகளை சாமானிய வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னால் இந்திய மனிதவியல் கருத்துக்கணிப்பு நிறுவனம் (Anthropological Survey of India) என்ற அரசு நிறுவனம், இந்தியாவைக் குறித்த ஒரு முக்கிய பதிப்பை வெளியிட்டது.

“இந்தியாவின் மக்கள்” (People of India) என்ற இந்த 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட பதிப்பு, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சமூகங்களை குறித்து பல முக்கிய தகவல்களை ஏறத்தாழ 30 ஆண்டுகளின் ஆய்வின் முடிவாக வெளியிட்டது. இந்த ஆய்வில் நமது மக்களின் பாரம்பரிய திறன்களை குறித்து ஒரு முக்கிய உண்மை வெளியானது. என்னவென்றால், நமது கிராமப்புறத்து மக்கள் யாரும் ஒரு திறன் சார்ந்த தொழில் மட்டும் செய்வதில்லை. ஒவ்வொரு சமூகமும் சராசரியாக, 5.3 விதமான தொழில்களை செய்து வருகின்றது. அதில் 1.5 விதமான தொழில்கள் பாரம்பரியமாகவும், 3.8 விதமான தொழில்கள் புதிதாக அவர்கள் தாங்களாகவே கற்றுக்கொண்டு முனைவதாகவும் உள்ளது.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
s
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org