தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


நாணல் கதிர்க்குருவி

ஆங்கிலப் பெயர்: Clamorous Reed Warbler

அறிவியற் பெயர்: Acrocephalus stentoreus

தோற்றம்

பழுப்பு நிறத்தில் இருக்கும்; சிட்டுக்குருவியை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும். கண்ணின் மேற்பகுதியில் வெள்ளைப் புருவம்போல் அமைந்திருக்கும். உடல் வெள்ளை நிறத்திலும், சிறகுகள் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஆண், பெண் இரண்டும் ஒரே வண்ணமாக இருக்கும். 18 முதல் 20 செ.மீ நீளமும், 25 முதல் 35 கிராம் எடையும் கொண்டது.

காணும் இடம்

குட்டை, குளம், வாய்க்கால்கள், சுரப்புன்னைக் காடுகள், வயல்கள், புதர்கள் போன்ற இடங்களில் இவற்றைக் காணலாம். வட இந்தியாவில் அதிகமாகவும், தென்னிந்தியாவில் அரிதாகவும் காணலாம் (இது சீர்காழியில் தென்பட்டது பெரும் அதிர்ஷ்டமே!). விழல் எனப்படும் ஓடையோர நாணல்களில் கூடு கட்டும்.

உணவு

வெட்டுக்கிளி, புழு, பூச்சிகள், தும்பி போன்ற பறக்கும் பூச்சிகள்.

இனப்பெருக்கம்

மாசி முதல் ஆடி வரை இந்தியாவில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். விழல்/ நாணல்/ கோரைப்புல் அதிகமாக இருக்கும் இடங்களில் புல்லின் இலைகளைக் கொண்டு சிறிய கூட்டைக் கட்டி 3 முதல் 6 முட்டைகள் வரை இடும். ஆண் பெண் இரு பறவைகளும் குஞ்சு வளர்ப்பில் ஈடுபடும்.

குறிப்பு

குரலை வைத்தே இதனை அடையாளம் காண முடியும். கிரிக், கிரிக், கிரிக், கிரிக் என்று நான்கு முறை பாடிப் பின் வேகமாக கிர்ரீக் என்று கத்தும்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org