மஞ்சள் சிட்டு:
இந்த மாதம் நாம் காணும் பறவை ஒரு வசந்த காலக் குருவி. அழகே உருவான இக்குருவிக்கு சின்ன மாப்பிள்ளைக் குருவி மற்றும் மஞ்சள் சிட்டு என்ற பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் Common Iora என்று பெயர் பெற்ற இதன் அறிவியல் பெயர் Aegithina tiphia. வசந்த காலம் வந்ததின் அடையாளமாய் மா, முருங்கை, மருதாணி, புங்கன், ஒதியன் போன்ற மரங்கள் பூவாய்ச் சொரிந்து அழகை ஆராதிக்கும். இந்த அழகுக்கு மிக அழகு சேர்க்கும் ஒரு அழகிய சிறு பறவை மஞ்சள் சிட்டு.
இம்மரங்களின் இடையே ஒரு சிறிய கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை நிறங்கள் கலந்த மஞ்சள் சிட்டைப் பொறுமையாக அமர்ந்து காலை/மாலை நேரம் காத்திருந்தால் காணலாம். மர உச்சியில் அங்கும் இங்கும் அலைந்து , இனிய விசில் போன்ற ஒலி எழுப்பும். (பல பறவைப் பார்வையாளர்கள் மஞ்சள் சிட்டையும், மாங்குயிலையும் குழப்பிக் கொள்வர். மாங்குயிலை விட இது சிறியதாக இருக்கும்).
கேழ்வரகு இட்லி
இன்று ஓரளவு பிரபலம் அடைந்து வரும் சத்து மிகுந்த உணவுகள் நம் முன்னோர்கள் உண்ட சிறுதானிய உணவு வகைகள். ஆனால் பலரின் கேள்வி இந்த சிறுதானியங்கள் நம் நெல் அரிசியை விட விலை கூடுதலாகவும் தேடிபோய் வாங்க வேண்டி உள்ளது என்பதே. இந்த சிறுதானிய வகையை சேர்ந்த நம் கேழ்வரகு (ராகி) நமது கேள்வியில் இருந்து சற்று மாறுபட்டதே. கேழ்வரகு எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக் கூடியது மட்டும் அல்ல, குறைந்த விலை, அதிக சத்துக்கள் கொண்டதும். கேழ்வரகில் சுண்ணாம்பு சத்து, நார்சத்து, புரதம், இரும்பு சத்து என எல்லா சத்துகளும் உள்ளது.
மண் பயனுற வேண்டும்
நாம் 'மண் பயனுற வேண்டும்' தொடரில் மண்ணால் வீடு கட்டும் தொழில்நுட்பங்களைப் பற்றி எழுதி வருகிறோம். ஆனால் தற்காலத்தில் மண்ணால் வீடு கட்ட யார் துணிவார்கள்? இதெல்லாம் கவைக்கு ஒவ்வாது என்று பெரும்பாலோர் புறக்கணித்து விடுகிறார்கள். விரைவில் மண்ணைத் தவிர வேறு தொழில்நுட்பங்களைப் பயன் படுத்த இயலாத அளவு ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு விடும்! அப்போது மண்ணால் வீடு கட்டும் தொழில்நுட்பங்கள் அழிந்து போய் விடலாம் - எனவே வரு முன்னர்க் காப்போராய், அறிவுள்ள மக்கள் இத்தொழில் நுட்பங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது மிக நன்று. 21ம் நூற்றாண்டில் மண்ணால் வீடு கட்டிக் குடி பெயரப் போகும் ஒரு தம்பதியினரை இவ்விதழில் காண்போம்.