குருஜீ என்று அவரை தெரிந்தவர்கள் பலரால் மரியாதயுடன் அழைக்கப்படும், திரு. ரவீந்தர சர்மா, ஒரு ஆன்மீக நெறியையோ அல்லது மடத்தையோ சார்ந்தவர் அல்ல. அவர் முப்பது காலமாக இன்றைய தெலுங்கானா மாநிலத்தின் ஒரு முக்கியமான ஊராக விளங்கும், அதிலாபாதில், அதைச் சுற்றியுள்ள பழங்குடியினர் சமூகத்தினுடன் வாழ்ந்தும், அவர்களிடமிருந்து கற்றும், தான் கற்றவற்றைப் பிறரிடம் பகிர்ந்தும் வருகிறார். வருடம் முழுவதும் பல கலைகளைச் செய்துவரும், திரு. சர்மா, வருடத்தின் வெவ்வேறு காலங்களில், மண்ணையும், கல்லையும், உலோகத்தையும் மரத்தையும் கொண்டு கலைநயம் மிக்க பொருட்களைத் தன் கைகளினால் படைத்து வருகின்றார். இவர் படிக்கும் காலத்திலிருந்தே தம்மைச் சுற்றியுள்ள இதர சமூகத்தினருடன் பழகியும், அவர்களிடம் இருந்து பல கலைகளைக் கற்றும் வந்தார். முதுகலைப் பட்டம் படிக்க போபாலில் உள்ள பல்கலைகழகத்திற்க்கு இவர் சென்றபோது, அங்குள்ள பேராசிரியர்களைவிட இவருக்கு அதிகம் தெரிந்திருந்ததால், இவரை ஒரு ஆசிரியராகவே அந்தக் கல்லூரி நடத்தியது. சிறிது காலத்திற்க்குப் பின் கல்லூரி வாழ்க்கை தமக்கு ஒத்துவராது என்று விட்டு விலகிய திரு. சர்மா, தமது அடுத்த 30 வருடங்களில் பெரும்பாலும், “பாண்டு” (காற்சட்டை) அணிந்தவர்களின் சகவாசத்தையும், பேசுவதையுமே தவிர்த்து,
- 01. தலையங்கம்
- 02. மாடல்ல மற்றையவை
- 03. உழந்தும் உழவே தலை
- 04. அடிசில் பார்வை
- 05. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி
- 06. வேகும் புவியும் சாகும் உயிரிகளும்
- 07. நிரம்பிய நூல் - ராம்
- 08. புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா
- 09. செவிக்கு உணவு இல்லாத போது
- 10. நிலப் பறிப்பு - மனிதர் உணவை மனிதர் பறித்தல்
- 11. மண் பயனுற வேண்டும்
- 12. குமரப்பாவிடம் கேட்போம்
- 13. கடைசிப் பக்கக் கவிதை