தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து


கம்பு கிச்சடி

மானாவாரியிலும் இறவையிலும் விளைக்கப்படும் கம்பு உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது. சுவையாய் இருக்கும் உணவு நலமாயும் இருக்க வேண்டுமானால் சத்துள்ள தானியங்களில் பற்பல உண்டி வகைகள் கண்டறியப்பட வேண்டும். பாதுகாப்பான, பாரம்பரியமான, சத்தான மற்றும் அனைவரின் வசதிக்கும் எட்டக் கூடிய உண்டிகளைத் தொகுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவ்வகையில் இம்மாதம், கம்பும், பச்சைப் பயறும் சேர்த்து செய்த கிச்சடியைப் பார்க்கலாம்.இவ்வுண்டி, நம் தமிழ்நாட்டுப் பொங்கலைப் போல், ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.

முழுக் கட்டுரை »

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


வலி முந்து கூகை

மனிதன் தோன்றிய காலம் முதல் அவனுடன் வாழ்ந்து வரும் பழமை வாய்ந்த பறவை ஆந்தை. புராண காலங்கள் முதல் இன்று வரை இதை “கெட்டது, அபசகுனம், கண்டால் காரியத் தடை” என்று பல மூட நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் லட்சுமி கடாட்சத்தை விரும்பும் நாம் மகாலட்சுமியின் வாகனம் இந்த ஆந்தைதான் என்று தெரிந்தால் ஆச்சரியப் படுவோம்! இதைப் பகலில் கண்டால் பண வரவு ஏற்படும் என்று சிலர் நம்புவர்

முழுக் கட்டுரை »

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு… டாக்டர்.சிவகுமரன்

நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்வாறேனும் நோய் வந்துவிடுகின்றது. நோய் வந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய் தீரும். ஆனால் நோயே வராமல் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? அதிலும் நோயுற்றால் மருந்தில்லாமல் மருத்துவம் செய்ய இயலுமா? அவ்வாறு மருத்துவம் செய்தால் நோய் நீங்குமா? இவ்வாறு பல்வேறு வினாக்கள் நம் உள்ளத்தில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் விடையளித்து மருந்தில்லா மருத்துவத்தையும் தமிழ் சித்தர் திருவள்ளுவர் எடுத்தியம்புகிறார். மேலும் படிக்க...»

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org