தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலைநகரில் ஒரு உழவர் பேரணி - அனந்து


டில்லியில் கிஸான் மஹா பஞ்சாயத்

உழவர்களின் நலனைச் சற்றும் கருத்தில் கொள்ளாது பன்னாட்டுப் பெரும்நிறுவனங்களுக்குச் சாதகமாய் மத்திய அரசு செயல்பட்டு வருவதை எதிர்த்தும், உழவர்களுக்கு ஒரு அடிப்படை வருமானத்திற்கு உத்திரவாதம் கோரியும், வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மாபெரும் விவசாயிகள் கூட்டம் மற்றும் போராட்டம் ஒன்று கடந்த மாதம் (மார்ச் 18 முதல்) டெல்லியில் கூடியது. இதில் இந்தியா முழுவதிலிருந்தும் விவசாயிகள் வந்திருந்தனர். நம் தமிழகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வந்திருந்தனர். உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, இயற்கை விவசாயி ராஜரீகா, விவசாயிகள் தலைவர் நல்ல கவுண்டர், கன்னையன் போன்றவர்களை அங்கு காண முடிந்தது. உத்தர பிரதேசம், ஹரியான, பஞ்சாப், முதலிய மாநிலங்களிலிருந்து பெரும் திரளாக விவசாயிகள் வந்திருந்தனர்.

முழுக் கட்டுரை »

உணவும் உரிமையும் - சரா


உலக அளவில், ஐ நா வளர்ச்சி கழகம், ஒவ்வொரு வருடமும், HDI அதாவது, “மக்கள் வளர்ச்சி குறியீடு” என்று பல கூறுகளை கொண்ட ஒரு மதிப்பீட்டை வெளியிட்டு வருகின்றது. இதை போலவே, “சமூக வீழ்ச்சி குறியீடு” (Social Degeneration Index, SDI) என்று ஒரு மதிப்பீடு செயப்படால், அதில் ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவே அனைத்து நாடுகளையும் விட முதலிடத்தில் நிற்கும்! சரித்திரத்தில் பல பெரிய ராஜ்ஜியங்களின் வீழ்ச்சியை படித்திருக்கின்றோம், ஆனால், அவை எப்படி நிகழலாம் என்பதை நமது காலத்தில், அமெரிக்காவை பார்த்து தெரிந்து கொள்ளமுடிகின்றது. அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தில் பல புதிய குழப்பங்கள், அவை என்ன?

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org