தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

விசும்பின் துளி


சோழர்களின் பாசனப் பணிகள் தொடர்சியாக நடைபெற்று வந்தது. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவெறும்பூர் ஊர் மேம்பாட்டிற்காக விதிக்கப்பட்ட தீர்வைபற்றி பத்தாம் நூற்றாண்டு ஆவணம் பின்வரும் தகவலைக் கூறுகிறது, ‘…திருவெறும்பூர் சிவன் கோவிலை தீர்மானித்த செம்பியன் வடிவேலன் என்பவர் அக்கிராமத்து ஏரியை ஆழப்படுத்த 45 களஞ்சு தங்கம் அளிக்க முன்வந்தார்…’ என்று விரிவாகக் கூறிச் செல்கிறது. இக்காலம் இராசராசன் காலமாகும். இதேபோல குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு உடைந்துபோன ஏரியைப் பராமரிப்பது பற்றி விரிவாகச் சொல்கிறது. இது ஏரி அடைக்க பொற்காசுகள் அளித்த செய்தி கூறுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1192 ஆம் ஆண்டைச் சேர்ந்தது.

முழுக் கட்டுரை »

புதிய புலவர்கள் - வழிப்போக்கன்


இயல்பாய் உள்ளதை உள்ளபடி அறிவது அறிவியல். பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் புத்தம் புதிய கலைகள், உண்மையான ஆர்வத்தினால் உருவாகி வளர்ந்தன. இந்தியாவின் ஜகதீச சந்திர போஸ், ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், காந்தியின் சீடரான சதீஷ் சந்திர தாஸ் குப்தா போன்ற மிகப் பெரிய அறிவிலாளர்கள் 'காசு நம் பால் செல்லாதடா' என்று லாப நோக்கைப் புறக்கணித்துத் தங்கள் வாழ்நாளை அறிவியல் தேடலுக்கும் சுயநலமற்ற சேவைக்கும் அர்ப்பணித்தனர். அதன் பின் வந்த அறிவியல் வரலாற்றைப் பார்த்தால், சுயநலமான விஞ்ஞானிகளாயினும், தங்கள் கல்வியைச் செல்வமாக்கினாலும், தங்கள் அறிவுத் தேடலில் ஒரு திடமான நேர்மையும், கண்ணால் காண்பது மட்டுமே மெய் என்று தங்கள் பரிசோதனைச் சாலை முடிவுகளை அப்படியே குறித்தும், பிரசுரித்தும் விஞ்ஞானிகள் மேல் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஒரு பற்றும், மரியாதையும் ஏற்படும்படி நேர்மையாய் இருந்தனர்

முழுக் கட்டுரை »

அறிவியலா அழிவியலா - தமிழில் பாபுஜி


நாம் உயிர் வாழ விரும்பினால் நம்முடைய தலையாய கடமை நம் உலகையும் நம் நாகரீகத்தையும் அழிக்க துடிக்கும் 'அறிவியலாளர்களை தடுத்து நிறுத்துவதாகும். நம் புவியின் வட பகுதி முழுதும் புகுஷிமா அணு உலையினால் உண்டான பெரும் கதிர் வீச்சினால் பாதிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நம் புவியானது ஒரே ஒரு நில நடுக்கம் ஏற்பட்டால் கூட கதிர் வீச்சு பேரழிவை சந்திக்கக்கூடிய நிலையில் உள்ளது. அணு சக்தி மிகவும் பாதுகாப்பானது மற்றும் சிக்கனமானது என்று நமக்கு உறுதி அளித்த அறிவியலாளர்கள் நம்மை இவ்வாறு அழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தி உள்ளனர்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org