தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

வலி முந்து கூகை

மனிதன் தோன்றிய காலம் முதல் அவனுடன் வாழ்ந்து வரும் பழமை வாய்ந்த பறவை ஆந்தை. புராண காலங்கள் முதல் இன்று வரை இதை “கெட்டது, அபசகுனம், கண்டால் காரியத் தடை” என்று பல மூட நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் லட்சுமி கடாட்சத்தை விரும்பும் நாம் மகாலட்சுமியின் வாகனம் இந்த ஆந்தைதான் என்று தெரிந்தால் ஆச்சரியப் படுவோம்! இதைப் பகலில் கண்டால் பண வரவு ஏற்படும் என்று சிலர் நம்புவர்.

வாழ்முறை:

ஆங்கிலத்திலே ஆந்தைகளின் கூட்டத்திற்கு பாராளுமன்றம் (Parliament ) என்று பெயர்! கூட்டமாகச் சில சமயம் காணப்பட்டாலும் பெரும்பாலானவை தனிமையில்தான் வாழும். இரவு நேரங்களில் மட்டும் வெளியே வரும். எலி, பூச்சி, பறவை, மீன்க‌ள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும். அன்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற கடுமையான குளிர் பிரதேசங்களைத் தவிர உலகின் எல்லா இடங்களிலும் இவை வாழும்.

தோற்றம்:

அறிவியலாளர்கள் உருவ அமைப்பைக் கொண்டு இதை Tytonidea (சிறியவை) ,Strigidae (பெரியவை) என்று பிரிக்கின்றனர். விழிகள் பூதக் கண்ணாடி போன்றவை. பகலில் மங்கலாகவும் இரவில் கூர்மையாகவும் இவற்றிற்குப் பார்வை தெரியும்.

ஆந்தையின் சிறகுகள் நீளமாக இல்லாமல் ஒரு விதமான வட்ட வடிவமாக அமைந்திருக்கும்; இது எளிதில் வளைந்து கொடுத்து, வேட்டையாடுவதற்கு மிக ஏற்றதாய் இருக்கிறது.

முட்டைகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். 3-5 முட்டைகள் இடும். முட்டை பொரிந்து குஞ்சு வர 31 முதல் 37 நாட்கள் ஆகும்.

தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப் படும் ஆந்தைகள்

பழக்க வழக்கங்கள்:

'காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர் ' என்பார் தாயுமானவர். ஆந்தைகளும் அப்படியே. தான் வேட்டையாடிய உணவைத் தன் இனத்தை அழைத்துப் பகிர்ந்து உண்ணும்.

பெண் ஆந்தைகள் இரவு முழுவதும் பேசிக் கொண்டே இருக்குமாம்! தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஆந்தையின் வம்பில் தூக்கம் இழந்து இதை நன்கு அறிவார்கள்.

உழவனின் நண்பன்

நம் நாட்டின் ஒட்டு மொத்த விளைச்சலில் 25% எலிகளால் தின்னப் படுகின்றன. ஒரே ஒரு கூகை ஆந்தைக் குடும்பமானது, ஒரு அடைகாக்கும் பருவத்தில் 3000 எலிகளைத் தின்று விடும். பின் இது மகாலட்சுமியின் வாகனமாய் இருபதில் வியப்பென்ன!

பிற சிறப்புக்கள்:

விமானப் பொறியாளார்கள் ஆந்தையின் சிறகு அமைப்பு போன்ற அமைப்பில் சிறகுகள் அமைத்து எரிபொருள் சேமிக்கும் ஆராய்ச்சியில் உள்ளனர்.

லிதுவேனியா நாட்டின் வெள்ளிக்காசில் இதனுருவம் பதித்துக் கௌரவித்துள்ளனர். மேலைநாடுகளில் அலைபேசியின் அழைப்பு மணியாக ஆந்தையின் குரல் பிரபலமாய் உள்ளது!

சங்க இலக்கியம்:

நற்றிணை 83; குறிஞ்சித் திணையில் பெருந்தேவனார் பாடல்:

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org