தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து

கம்பு கிச்சடி

மானாவாரியிலும் இறவையிலும் விளைக்கப்படும் கம்பு உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது. சுவையாய் இருக்கும் உணவு நலமாயும் இருக்க வேண்டுமானால் சத்துள்ள தானியங்களில் பற்பல உண்டி வகைகள் கண்டறியப்பட வேண்டும். பாதுகாப்பான, பாரம்பரியமான, சத்தான மற்றும் அனைவரின் வசதிக்கும் எட்டக் கூடிய உண்டிகளைத் தொகுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவ்வகையில் இம்மாதம், கம்பும், பச்சைப் பயறும் சேர்த்து செய்த கிச்சடியைப் பார்க்கலாம்.இவ்வுண்டி, நம் தமிழ்நாட்டுப் பொங்கலைப் போல், ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த முழுக் கம்பு - 2 கோப்பை

முழுப் பச்சைப் பயறு - 1/2 கோப்பை

மிளகு - 5

லவங்கம் - 3 அல்லது 4

சீரகம் - 2 சிட்டிகை

பெருங்காயம் - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை

தூய்மையான நெய் - 1 தேக்கரண்டி

உப்பு தேவையான் அளவு

நீர் - 5 கோப்பை

செய்முறை

கம்பையும், பயறையும் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும் (முன்னாள் இரவே). கம்பை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். பச்சைப்பயறை நன்றாகக் கழுவிக் களைந்து கொள்ளவும்.

கிச்சடிக் கடாயில் நெய்யைக் காய்ச்சி மிளகு, லவங்கம் மற்றும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். சீரகம் வெடிக்கும் போது பெருங்காயத்துடன் , உப்பும், நீரும் சேர்க்கவும். பயறும், கம்பும் சேர்த்து மிதமான தீயில் பொறுமையாக வேகவைக்கவும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும் கிச்சடி கட்டி தட்டி விடாமல் கிளற வேண்டும். கம்பு மென்மையான பதத்திற்கு வரும் வரை வேகவைக்க வேண்டும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற பதத்திற்கு நீரைக் கூட்டிக் கொள்ளலாம். சூடாக நெய், தயிர், ஊறுகாய் அல்லது சட்டினியுடன் பரிமாற‌வும்.

கம்பமா என்றால் யானை என்ற பொருள் உண்டு. கம்பைத் தின்றால் கம்பமா போல் திடம் பெறலாம்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org