தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அறிவியலா அழிவியலா - தமிழில் பாபுஜி


[ஆங்கில மூலம்: http://www.naturalnews.com/035790_scientific_suicide_humans.html]

நாம் உயிர் வாழ விரும்பினால் நம்முடைய தலையாய கடமை நம் உலகையும் நம் நாகரீகத்தையும் அழிக்க துடிக்கும் 'அறிவியலாளர்களை தடுத்து நிறுத்துவதாகும். நம் புவியின் வட பகுதி முழுதும் புகுஷிமா அணு உலையினால் உண்டான பெரும் கதிர் வீச்சினால் பாதிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நம் புவியானது ஒரே ஒரு நில நடுக்கம் ஏற்பட்டால் கூட கதிர் வீச்சு பேரழிவை சந்திக்கக்கூடிய நிலையில் உள்ளது. அணு சக்தி மிகவும் பாதுகாப்பானது மற்றும் சிக்கனமானது என்று நமக்கு உறுதி அளித்த அறிவியலாளர்கள் நம்மை இவ்வாறு அழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தி உள்ளனர்.

நாம் இவ்வாறு சீசியம் 137 இனால் உண்டாகக்கூடிய கதிர் வீச்சு அழிவின் விளிம்பின் வாழ்கையில், மரபீனி அறிவியலாளர் என்று கூறிக்கொண்டு இன்னொரு கூட்டமோ சுயமாய்ப் பெருக்கிக் கொள்ளும் மரபீனி மாசு கொண்டு நம் எதிர்காலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த அறிவியலாளர்கள் மொன்சொண்டோ, து போன், சின்சென்ட்டா போன்று சுய லாபத்திற்காக எதிர்கால உயிரினங்களை காவு கொடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்கிறார்கள். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை (உணவுகளை) ஆதரிக்கும் ஒவ்வொருவரும், பில் கேட்ஸ் உட்பட, மனித இனத்திற்கும் இயற்கைக்கும் எதிரான குற்றங்களை செய்த குற்றவாளிகளே. அவர்கள் புவியின் தொடர் பரிணாம வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பவர்கள் என்கிற காரணத்தினால் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

உயிரியல், நச்சு மருந்துகள் நம் இருத்தலையே அச்சுறுத்தும் வண்ணம் இருக்கின்றன.அறிவியல் என்ற பெயரால் முன்வைக்கப்படும் இம்மருந்துகள் உண்மையில் நம் நரம்பு மண்டலத்தை மிக மோசமாக பாதித்தும் மலட்டுத்தன்மையை அதிகரித்தும், மனித இனத்தின் வருங்கால சந்ததியினரை உருவாக்கும் செயல்திற‌னை குறைத்தும், வருகின்றன.

பூச்சிமருந்துகளில் உள்ள விஷத்தினால் தேனியினம் அழிந்து வருகிறது; இதனால் நம் உலகளாவிய உணவு உற்பத்தி குறைந்து வருகிறது . இந்த உயிர்க்கொல்லிகள் அறிவியல் என்ற பெயரால் முன்நடத்தப்படுகின்றன.

உண்மையில் இப்போது நம் புவியையும், நாகரீகத்தையும் எது பாதிக்கிறது என்று நேர்மையாக நாம் நோக்கினால், அது அறிவியல் என்ற பெயரால் செய்யப்படும் ஏதாவது ஒன்றாகவே இருக்கும்.

அறிவியலால் சாவு

  • மண் வளத்தையும் ஆறுகளையும் கொல்லும் நச்சு உயிகொல்லிகள்? = அறிவியல்! .
  • ப்லூரைட் என்கிற ஆலைக்கழிவுகளில் உள்ள நச்சு பொருட்கள் கலந்த கலவையால் மக்களுக்கு விஷம் அளிக்கும் செயல்? = “அறிவியலுக்காக செய்யப்பட்டது!”
  • மக்கள் கூட்டத்தை தரைமட்டமாக்கிய அணு குண்டுகள்? = “அறிவியல்!”
  • மார்பக புற்று நோய் உள்ளதா என்று கண்டறிய உதவும் கருவி மற்றும் உடலின் உட்பகுதியை படம் பிடிக்க கூடிய கருவிகள் (- இவை இயல்பில் புற்று நோயை உண்டாக்க உதவுகின்றன)?= அறிவியல் பூர்வமானது!”
  • வேதிப்பொருட்களை கொண்டு புற்று நோயை அழிக்க செய்யப்படும் மருத்துவத்தால் விளையும் நச்சு, “முன் தடுப்பு” மார்பக அகற்றல் (புற்று நோய் பரவாமல் இருக்க அறுவை சிகிச்சை), புற்று நோய்க்கு கதிர் வீச்சு சிகிச்சைகள்? - இவை எல்லாமே “அறிவியல்”!
  • பற்குழிகளை அடைக்க பாதரசத்தை பயன்படுத்தி பல குழந்தைகளை நச்சு விளைவுகளுக்கு ஆளாக்கியது? அவர்கள் இதை “அறிவியலின் அடிப்படையிலான பற்சிகிச்சை ” என்கிறார்கள்!

மேற்கூறியவற்றினால் நம் மனித இனம் அறிவியல் என்கிற பெயரால் கொலை செய்யப்படுவது தெளிவாகிறது.

இந்த புரிதலுக்கு பின்புலமாக உள்ள உண்மை இன்னும் பெரும் தாக்கத்தை உண்டாக்கக்கூடியது; “அறிவியல்” என்னும் பெயரால் நிகழும் பெரும்பான்மையான செயல்கள் பேராசை பிடித்த நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்ட, உண்மைக்கு புறம்பான, திரிக்கப்பட்ட “ஏமாற்று அறிவியலே”.

உண்மையான அறிவியல் என்பது புரிந்து கொள்ளுதலுக்கான ஒரு தேடலே அன்றி பொருளீட்ட முயலும் ஒரு முயற்சி அல்ல.

உண்மையான அறிவியல் நல்லதை நாடும், அறிவைத்தேடும் ஒரு முயற்சி. ஆனால் இன்றோ இவ்வகையான அறிவியல் முயற்சிகள் அதிகமாக நடைபெறுவதில்லை.

இன்று நடக்கும் அறிவியல் முயற்சிகள் பேராசை மிக்க நிறுவனங்களால் வணிக ரீதியாக கூடுதல் பொருளீட்டவும், கட்டுப்படுத்தும் ஆற்றலை பெருக்கிக்கொள்ளவும் செய்யப்படுகின்றன.

உதாரணத்துக்கு மருத்துவ துறையை எடுத்துக்கொண்டோமானால், புதிய மருந்துகளை நோக்கிய தேடல் மனித குலத்துக்கு தொண்டு செய்வதற்காக அல்ல, நிறுவனத்தின் லாபத்தைக் குறிவைத்தே என்பது நம்மில் மிக எளிதில் ஏமாற்றப்படக்கூடியவர்களை தவிர மற்ற எல்லோருக்கும் நன்கு தெரியும்.

மரபீனி பொருட்களை விளைவிக்கும் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவர்கள் உலகை தங்களின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர உணவை மனித இனத்தை ஆளுமை கொள்ளும் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்களே தவிர, உலகுக்கு உணவளிப்பதகற்காக அல்ல. உணவு அளிப்பதை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்கள் உலகில் உள்ள எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார்கள்.

ம‌ன்சாண்டோ நிறுவனம் எப்படியாவது உலகை த‌ன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறதே அன்றி உலகின் நலம் போற்றுவதற்காக அல்ல.

தடுப்பு மருந்துகள் உண்மையில் நோயை தடுத்து மக்களை திடமாக வாழ வைக்க உண்டாக்கப்பட்டவை அல்ல. எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்களை சுற்றுப்புற தூய்மை மற்றும் வைட்டமின்-டி உட்கொள்வதாலேயே தடுத்து விட முடியும். தடுப்பு மருந்துகள் உண்மையில் மக்கள் தொகையை

கட்டுப்படுத்துவதற்காகவும், தடுப்பு மருந்துகளால் பாதிக்ககப்பட்ட மக்கள் (நுரையீரல், கணையம், மூளை, குடல் மற்றும் பல உறுப்புக்கள்) மீண்டும் மீண்டும் மருத்துவ நிறுவனங்களிடம் இருந்து மருந்துகள் வாங்க செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு மட்டுமே.

இந்த பயிலப்படும் அறிவியல் என்பது கட்டுப்படுத்தும் திறமையையும், ஆற்றலையும் பெருக்கிக்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்படுகிறதே அன்றி மனித குல மேம்பாடு நோக்கி அல்ல. கண்டுபிடிப்பாளர்களின் முன்னுரிமையை (கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் சந்தைப்பெயர்கள்) பாதுகாக்கும் சட்டங்களும், கண்டுபிடிப்புகள் மீதான நிறுவனங்களின் முழு கட்டுப்பாட்டை காப்பதற்காகவே அன்றி அந்த கண்டுபிடிப்புகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்படவில்லை. பெரிய நிறுவனங்கள் அத்தகைய சட்டங்களை திரித்து முறுக்கி தங்களின் போட்டியாளர்களை சந்தையை விட்டே விரட்டவும் உலக அளவின் மொத்த சந்தையும் தம் ஒரு நிறுவனமே கட்டுப்படுத்த வேண்டும் என்ற பேராசையை நிறைவேற்றிக்கொள்கின்றன‌.

பல்கலை கழகங்களும் மனித குல மேம்பாட்டுக்காக ஆய்வு செய்வதை விட்டு விட்டு இப்போது வரி செலுத்துபவர்களின் பணத்தைக்கொண்டு காப்புரிமை பெறக்கூடிய வேதிப்பொருட்களை உருவாக்கி அவற்றை பயன்படுத்தும் உரிமையை வேதியியல்/உயிர்க்கொல்லி நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்று தங்களின் பண வளத்தை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்கின்றன.

இவ்வாறான காரணங்களால் “அறிவியல்” என்பது, நாணயமற்ற தன்மை, ஏமாற்றுத்தனம், பேராசை மற்றும் சாவு என்கிற பொருள் படுகிற ஒன்றாக ஆகி விட்டது. இத்தகைய அறிவியலை பயன்படுத்தும் மக்கள் உண்மையில் சாவை விளைவிக்கும் பொறியாளர்களாக, குறுகிய முதலீட்டு வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு தொலை நோக்கில் சாவையும், அழிவையும் விளைவிப்பவர்களாக ஆகிவிடுகின்றனர். உதாரணமாக ரவுண்டப் என்கிற களைக்கொல்லி நிலத்தையே பாழ்படுத்தி களைக்கொல்லிகளை தாங்கி வளரும் (“சூப்பர் வீட்ஸ்” ) களைகள் உருவாக காரணமாகிவிட்டது. மனித உயிரியலை பொறுத்த வரையில் ஆன்டிபையாடிக்ஸ் (Antibiotics) மருந்துகளை மட்டற்று உட்கொள்வதன் மூலம் உண்டாகும் சாவும், அழிவும், மற்றும் அச்சமூட்டும் வகையில் பெருகி வரும் MRSA மற்றும் பல Antibiotics ஐ தாங்கி வளரக்கொடிய நோய்களும் பெருகி வருகின்றன… (தொடர்ச்சி அடுத்த இதழில்)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org