தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவும் உரிமையும் - சரா

உலக அளவில், ஐ நா வளர்ச்சி கழகம், ஒவ்வொரு வருடமும், HDI அதாவது, “மக்கள் வளர்ச்சி குறியீடு” என்று பல கூறுகளை கொண்ட ஒரு மதிப்பீட்டை வெளியிட்டு வருகின்றது. இதை போலவே, “சமூக வீழ்ச்சி குறியீடு” (Social Degeneration Index, SDI) என்று ஒரு மதிப்பீடு செயப்படால், அதில் ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவே அனைத்து நாடுகளையும் விட முதலிடத்தில் நிற்கும்!

சரித்திரத்தில் பல பெரிய ராஜ்ஜியங்களின் வீழ்ச்சியை படித்திருக்கின்றோம், ஆனால், அவை எப்படி நிகழலாம் என்பதை நமது காலத்தில், அமெரிக்காவை பார்த்து தெரிந்து கொள்ளமுடிகின்றது. அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தில் பல புதிய குழப்பங்கள், அவை என்ன?

1. “மக்களுக்கு, சுதிகரிக்கபடாத பால் அருந்துவதற்கு எந்த விதமான சுதந்திரமும் கிடையாது”, என்று அமெரிக்க அரசாங்கத்தின் அங்கமான “FDA” என்கின்ற, உணவு மற்றும் மருந்துகளின் தரச்சான்று அளிக்கும் நிறுவனம் சமீபத்தில் அந்நாட்டு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது!

2. வேளாண் பொருட்களை நுகோர்வோரிடன் நேரடியாக சேர்க்கும், ஒரு இயற்க்கை விவசாயிகளின் முயற்ச்சியை எதிர்த்து FDA இவ்வாறு தெரிவித்துள்ள்து. இவர்கள் செய்ய விழைவது என்ன? விவசாயிகள் இயற்க்கை முறையில் பராமரிக்கப்பட்ட மாடுகளிலிருந்து வரும் பால் தனை நுகர் வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதே!! இதைதான் இந்த நிறுவனம்வன்மையாக எதிர்க்கின்றது!

3. அவர்கள் சுதிகரிக்காத பால் குடிப்பதை எதிர்க்கும் இந்த நிறுவனம், மேலும், “எல்லோருக்கும், எல்லா விதமான உணவும் தங்கு தடை இன்றி கிடைப்பதற்கான வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை” என்றும், ஆதலால் இப்போது அத்தகைய ஏற்பாடு செய்விக்கலாகாது என்பதை குறிக்கும் விதத்திலும், தெரிவித்துள்ளது!

4. இதே வழக்கில் மேலும், FDA, “அனைவருக்கும் பொதுவான உடல் நலத்தை பேணுவதற்கான ஒரு உரிமை நமது சத்தத்தில் எங்கும் அளிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கின்றது! அதாவது, இவர்களால் அங்கீகரிக்கபடாத ஒரு உணவு வகை-யை யாரேனும் உண்டு அதனால் அவர்கள் நன்றாக வாழந்தார்கள் என்றால் அதனை இவர்கள் எதிர்க்கின்றார்கள். இவர்கள் சொல்லும் உணவொன்று தான், உடல்நலம் பேணுவதற்கான ஒரே வழியாக இவர்கள் நம்புகின்றார்கள்!

5. இன்னமும் விதை, நம்ம நாட்டுக்கு, 'அந்நிய முதலீடு' என்கின்ற பெயரால் எல்லா விதமான ஒப்பந்தங்களும் திணிக்க வலியுறுத்தும் அமெரிக்க அரசாங்க நிறுவனமான FDA, அவர்கள் நாட்டை சேர்ந்த பொது மக்கள், “தாங்கள் நினைத்த விததிலேல்லாம் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொள்ள எந்த உரிமையும் இல்லை” என்றும் தெரிவிக்கின்றது!!

மக்களுக்கு தங்களன் உடல் நலத்தை குறித்து அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பாதையை தவிர்த்து வேறெந்த பாதையை தங்களாக்கி கொள்வதற்கான உரிமை இல்லை, என்பதே இத்தகைய வாதத்தின் அடிப்படை. அதாவது, உடல் நலம், உணவு, உணவு சார்ந்த பழக்க வழக்கங்கள், இவை அனைத்தும், அரசாங்கம் நிர்ணயித்த வழியிலேயே, நடக்க வேண்டும், மாறாக, சுயமாக சிந்தித்து, அத்தகைய சிந்தனையின் பெயரில் புசித்து வாழ்வதற்கான உரிமை, குடிமக்களுக்கு இல்லை என்பது இவர்களது ஆழ்ந்த நம்பிக்கை.

இத்தகைய நம்பிக்கினால் தானே இவர்கள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியான உணவு விற்பனை அங்காடிகள் அமைத்து உள்ளனர், ஒரே மாதிரியான உடல் பருமனால் அவதிபடுகின்றார்கள் (அமெரிக்காவில், இரண்டில் ஒருவர் உடல் பருமனால் அவதிப்படுவதாக சில வருடங்களுக்கு முன்னாள் வெளியான ஒரு தகவல் தெரிவித்தது), ஒரே விதமான வியாதிகளினால் அவதியுற்று மரிக்கின்றார்கள். இருந்தும் ஏன் இவர்கள் மாற்றத்தை எதிர்க்கின்றார்கள்? சமிபத்தில் அமெரிக்காவில் ஏற்ற்றப்பட்ட மற்றொரு சட்டத்தை புரிந்து கொண்டோமேயானால், இந்த அடிப்படை சித்தாந்தத்தின் மற்றொரு பக்கத்தையும் நன்கு உணர ஏதுவாக இருக்கும்.

மொன்சாண்டோ என்னும் நிறுவனம் உலகில் உள்ள அனைவரும் ஒவ்வொருமுறை உணவருந்தும் போதும் தனக்கு லாபம் வரவேண்டும் என்னும் வியாபார நோக்கத்தில், உலகில் உள்ள அனைத்து நாட்டு விதிகளை தனதாக்க முயற்சி செய்து வருவது நாம் அறிந்ததே. இவற்றில், இந்த விதிகளை விவசாயிகள் சுயமாக பாதுகாக்கவோ அல்லது பெருக்கவோ இயலாத வகையில், மரபீனி மாற்ற தொழில் நுட்பத்தினால், மலட்டு விதிகளை மாத்திரமே உருவாக்கும் பயிர்களாக மாற்றிவருவதயு, நாம் அறிவோம் அவர்கள தங்கள் நாட்டில் பெருகிவரும் எதிர்ப்பை சட்ட ரீதியாக, அரசாங்கத்தின் ஒரு மசோதாவின்படி சமீபத்தில் எதிர்கொண்டனர். இந்த விதை மசோதாவை பெரும்பாலான அமெரிக்கர்கள், “மொன்சாண்டோ பாதுகாப்பு மொசொதா” என்றே அழைக்கின்றனர் மொன்சாண்டோ கும்பணியை சேர்தவர்கள் தாங்களே இயற்றிய இந்த மசோதா அவர்கள் நாடாளுமன்றத்தில் யாருமே எதிர்பார்காத விதத்தில், மற்ற பல மசொதக்களின் மதியில் நுழைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது!!

“விவசாய உரிமை, 735” என்கின்ற இந்த மசோதாவில், FDA போன்ற மற்றொரு அமெரிக்க அரசாங்க பிரிவான USDA, அதாவது அவர்களின் விவசாய இலாக்கா, இவர்களுக்கு ஒரு வினோதமான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அது என்ன?, “எந்த விதமான சட்டத்தையும் பொருட்படுத்தாது, மரபீனி மாற்ற பயிர்களை, விவசாயிகளின் மற்றும் மரபீனி பயிர் தயாரிப்போர்களின் (அதாவது மொன்சாண்டோ போன்ற கொம்பனிகள்) கோரிக்கையின் பெயரில், உடனடியாக பயிர் செய்ய அனுமதி அளிக்கலாம்” என்பதே!!

கொடுமை என்னவென்றால், இந்த மசோதாவை எழுதியதே, மொன்சாண்டோ கம்பனியை சேர்ந்தவர்கள் தானாம். மொன்சாண்டோ கம்பனி அமெரிக்கர்கள் உண்ணும் 90% உணவின் விதைகளை தன வசம் வைத்துள்ளதுஉண்மை. இத்தகைய கொம்பனி தனக்கு தேவையான விதத்தில் சட்டத்தை மதிக்காமலும், தனக்கு தேவையான விதத்திலும் அரசனாக விதிகளையும், இலாக்காகளையும், அந்த இலாக்காவில் வேலை செய்பவர்களையும் கூட மாற்றும் தகுதி இந்த கம்பனிக்கு இருப்பது பலராலும் எதிர்க்கப்படும் தருவாயில் இத்தகைய மசோதா, அமெரிக்கர்களை கொதித்தெழ செய்துள்ளது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org