மக்காச்சோளம் பனிவரகு வதக்கிய சோறு
பனிவரகு அரிசியைக் களைந்து 2 கோப்பை தண்ணிருடன் குக்கரில் 2 சப்தம் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது எண்ணெய் கலந்து ஆற வைக்கவும். உதிர்த்த மக்காச்சோளத்தை அடுப்பில் வைத்து 5 சப்தம் வரும் வரை வைத்து சற்று குலைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத் தாள் மற்றும் காரட்டைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டு, மூன்றாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு, கருஞ்சீரகம் போட்டுப் பொரிந்தவுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் முட்டைக்கோஸ், குடைமிளகாய் மற்றும் காரட் சேர்த்து வதக்கவும். அனைத்தும் வதங்கியதும் வேக வைத்த மக்காச் சோளத்தை சேர்த்து வதக்கவும்.
மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி, பனிவரகு சாதத்தைச் சேர்த்துக் கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து மிதமான தணலில் 2 நிமிடங்கள் வைத்திருக்கவும். 2 நிமிடம் கழித்து அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
சத்தான, சுவையான மக்காச்சோளம் பனிவரகு வதக்கிய சோறு தயார்!
இது அனைத்து விதமான சத்துக்கள் கொண்டுள்ள எளிய உணவு. குறிப்பாக புரதம் மற்றும் நார்சத்து அதிகம் கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவாக இது இருக்கும். மசாலா அதிகம் இல்லாது எளிதில் செரிமானமாகும் ஒரு பழமையும் புதுமையும் கலந்த உணவு.
கை கால் வீக்கம் - நாச்சாள்
பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினமும் சீரான வளர்ச்சியையே ஒவ்வொரு நாளும் பெறுகின்றன. மனித இனமும் அவ்வாறு உடல் வளர்ச்சி சீராகவே அமைந்துள்ளது. ஆனால் பலருக்குக் காலை விடியும்போது கை, கால், முகம் என்று பல பாகங்கள் சாதாரண நிலையை விட சற்றுப் பெருத்தாற்ப் போல் வீக்கம் பெறுகிறது. பின் நேரம் செல்லச் செல்ல சாதாரண நிலைக்கு திரும்புவதும் இயல்பாகிறது. பெரும்பாலும் 40 வயதைக் கடந்தவர்களுக்கு இந்த தொந்தரவு ஏற்படுகிறது. உணவு, வேலை, பழக்க வழக்கம் என்று பல நிகழ்வுகள் நம்மை நகர்த்திக் கொண்டிருக்க நம் 'உடலின் இந்த செயல்பாடு ஏன்? ' என்ற கேள்வியுடன் நாளைத் தொடங்கிப் பின் அதற்கு விடை காண நேரமின்றி நாளை முடிக்கிறோம். பின் அடுத்த நாளும் இந்தக் கேள்வியுடன் தொடக்கம். நாட்கள் செல்ல செல்ல உடலில் ஏற்படும் இந்த மாற்றத்தைப் பொருட்படுத்தாததினால் பாதிப்பு தீவிரம் அடைகிறது. கை விரல் முட்டிகளில் தொடங்கிய வீக்கம் மெல்ல, மெல்ல உள்ளங்கை, கால்கள், முகம், முட்டிகள் என்று தொடர்வது மட்டுமல்லாது நமது வேலைகளையும் சரிவர செய்ய இயலாத நிலைக்குத் தள்ளுகிறது. நம் அன்றாட செயல்பாடுகளைக் காலை சில மணி நேரம் முடக்க ஆரம்பிக்கும்.