தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது


மக்காச்சோளம் பனிவரகு வதக்கிய சோறு

தேவையான பொருட்கள்
  • பனிவரகு அரிசி - ஒரு கோப்பை
  • மக்காச்சோளம் - 1/4 கோப்பை (நாட்டுச் சோளம்)
  • முட்டைக்கோஸ் துருவல் - அரை கோப்பை
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • குடைமிளகாய் - கால் பாகம்
  • காரட் - கால் பாகம்
  • வெங்காயத் தாள் - 2
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • செக்கு கடலை எண்ணெய் - 1/4 மேசைக்கரண்டி
  • பசு நெய் - 1/4 மேசைக்கரண்டி
  • கருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
  • இந்து உப்பு - தேவையான அளவு
செய்முறை

பனிவரகு அரிசியைக் களைந்து 2 கோப்பை தண்ணிருடன் குக்கரில் 2 சப்தம் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது எண்ணெய் கலந்து ஆற வைக்கவும். உதிர்த்த மக்காச்சோளத்தை அடுப்பில் வைத்து 5 சப்தம் வரும் வரை வைத்து சற்று குலைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத் தாள் மற்றும் காரட்டைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டு, மூன்றாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு, கருஞ்சீரகம் போட்டுப் பொரிந்தவுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் முட்டைக்கோஸ், குடைமிளகாய் மற்றும் காரட் சேர்த்து வதக்கவும். அனைத்தும் வதங்கியதும் வேக வைத்த மக்காச் சோளத்தை சேர்த்து வதக்கவும்.

மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி, பனிவரகு சாதத்தைச் சேர்த்துக் கிளறவும்.

நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து மிதமான தணலில் 2 நிமிடங்கள் வைத்திருக்கவும். 2 நிமிடம் கழித்து அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

சத்தான, சுவையான மக்காச்சோளம் பனிவரகு வதக்கிய சோறு தயார்!

இது அனைத்து விதமான சத்துக்கள் கொண்டுள்ள எளிய உணவு. குறிப்பாக புரதம் மற்றும் நார்சத்து அதிகம் கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவாக இது இருக்கும். மசாலா அதிகம் இல்லாது எளிதில் செரிமான‌மாகும் ஒரு பழமையும் புதுமையும் கலந்த உணவு.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org