தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி

செம்மார்பு குக்குருவான்

செம்மார்பு குக்குருவான் என்றும் சின்னக் குக்குருவான் என்றும் ஆங்கிலத்தில் coppersmith barbet என்றும் விஞ்ஞானிகளால் Megalaima haemacephala என்றும் பலவாறாய் அழைக்கப்படும் இந்த அழகிய சிறிய பறவைதான் இந்த மாதக் கதாநயகன்.

கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் காணப் படும் இச்சிறு குருவி பல வண்ணங்களுடன் நம் கண்களைக் கவரும் நாயகன்.

தோற்றம்:

சிட்டுக்குருவி அளவில் (15 முதல் 17 செ.மீ) இருக்கும். ஆண், பெண் இரண்டும் ஒரே போல் இருக்கும். சிறகுகள் - ப‌ச்சை, மூக்கு - கருப்பு, மூக்கின் மேல் பகுதி சிகப்பு, கண்களைச் சுற்றி - வெண்மையும் கருப்புப் கோடும், கழுத்து மஞ்சள், கழுத்தின் அடிப்பகுதி நீல நிறக் கோடுகளுடன் சிகப்பு, உடல் சாம்பல் நிறம் அதில் கருநீலக் கோடுகள், வால் சிறியதாய் நீல நிறத்தில், கால் பவளம்போல் என்று ஓவியன் ஒருவன் மிகுந்த உழைப்புடன் தீட்டியது போல் இருக்கும்!

காணும் இடம்

பூங்காக்களில், தோட்டங்களில், பழமரங்களில் இவற்றைக் காணலாம். நகரத்திலும், கிராமத்திலும் இருக்கும். மரத்தின் உச்சியில் அமர்ந்து கொல்லன் உளி அடிப்பது போல் ஓசையெழுப்பும். ணங், ணங் என்ற சீரான ஓசையினால் இதை இனங்கண்டு கொள்ளலாம்.இந்தியத் துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் வருடம் முழுவதும் வசிக்கும் பறவை.

இனப்பெருக்கம்

மரங்களின் பொந்துகளில் பெரும்பாலும் தன் கூட்டை அமைக்கும். மரங்களின் மேல்கிளைகளில் உள்ள பொந்துகளில் கிளியைப் போல் கூடு அமைக்கும். மாசி முதல் சித்திரை வரை இனப்பெருக்க காலம். 3 முதல் 4 முட்டைகள் இடும்.

- 2011ம் ஆண்டு மும்பை நகருக்கான அதிகாரபூர்வமான‌ பறவை எது என்ற வலைத்தள வாக்கெடுப்பில் இது தேர்ந்தெடுக்கப் பட்டது

- சிறிய பறவை என்பதால் எளிதில் தென்படாது. வெண்கலம் அடிபடுவது போன்ற “ணங் டுன்ங்” என்ற ஒலிகளைக் கொண்டு இதனை அறியலாம்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org