தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மண்ணாசைப் பட்டவனை மண்தின்று போட்டதடா!

பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

[கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.]

அண்மையில் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் மாற்றங்கள் சிலவற்றை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் முன்வைத்துள்ளது.

இவ்வகையில் பாதிக்கப்படக்கூடிய சட்டக் கூறுகள் சில வருமாறு:

1. பொதுத்துறை-தனியார்துறை கூட்டுப்பங்காண்மை (பொதகூ) திட்டங்களுக்கு ஒரு பகுதியில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி மக்களில் குறைந்தது எழுபது விழுக்காட்டினரும், முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்களுக்கு எண்பது விழுக்காட்டினரும் ஒப்புதல் தரவேண்டும்.

2. நிலத்தைக் கையகப்படுத்துதல் குமுகத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து முன்னதாகவே கண்டிப்பாக ஆய்வு (குமுகத் தாக்க ஆய்வு) செய்யவேண்டும்.

3. பலவகைப் பயிர்கள் பயிரிடப்படும் பாசன நிலங்களை ஆலைத் திட்டங்களுக்குக் கையகப்படுத்த வேண்டுமானால் அவற்றுக்கு மாறாகத் தரிசு நிலங்களை வேளாண்மைக்கு உகந்தனவாக மாற்றவேண்டும். இவற்றை ஒரேயடியாக நீக்கவேண்டும் அல்லது நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்பது ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் குறிக்கோள். அண்மையில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தலைமை அமைச்சரின் அலுவலகத்துக்கு அனுப்பிய குறிப்பு ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

1. பொதுத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் மக்களிடம் அத்திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் சட்டக் கூறு ஒரேயடியாக நீக்கப்படவேண்டும் அல்லது அந்த மக்களில் (குறைந்தது எழுபது விழுக்காட்டினரிடம் என்பதற்கு மாறாக) பாதிப் பேரிடம் ஒப்புதல் பெற்றால் போதும் என்று வரையறுக்கலாம்.

2. பெரும் திட்டங்களுக்கு மட்டும் குமுகத் தாக்க ஆய்வு தேவை, பிற திட்டங்களுக்குத் தேவையில்லை.

3. தரிசு நில மேம்பாட்டு நிபந்தனையைக் கைவிடவேண்டும். ஏனெனில், டெல்லி, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரக்காண்ட் முதலிய மாநிலங்களில் அவ்வாறு மேம்படுத்தப்படக்கூடிய தரிசு நிலங்களே இல்லை. நடுவண் அரசு மட்டுமன்றிப் பல மாநில அரசுகளும் (இவற்றில் பேராயக் கட்சி அரசுகளும் அடங்கும்) சட்டத்தில் பெரும் மாற்றங்கள் தேவை என்று கூறுகின்றன. அப்படிச் செய்யாவிடில் கட்டுமானத் துறைத் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது அவ்வரசுகளின் வாதம்.

நன்றி: http://www.outlookindia.com/news//article/Rural-Min-Suggests-IndustryFriendly-Changes-in-Land-Act/849843

இமாச்சலப் பிரதேசம் himachal pradesh உத்தரக்காண்ட் uttarakhand ஊரக மேம்பாட்டு அமைச்சகம் the rural development ministry குமுத் தாக்க ஆய்வு social impact assessment கோவா goa நிலம் கையகப்படுத்துதல் சட்டம் the land acquisition act பேராயக் கட்சி 'காங்கிரசுக் கட்சி' என்பதன் தமிழ்வடிவம் பொதுத்துறை-தனியார்துறைக் கூட்டுப்பங்காண்மை public-private partnership விழுக்காடு ''சதவீதம்' என்பதன் தமிழ்வடிவம்

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org