தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது - Sri


கேழ்வரகு கார புட்டு

ராகி, கேப்பை, Finger Millet என்ற பெயர்கள் பெற்ற கேழ்வரகின் நற்பண்புகளைப் பற்றிப் பலமுறை கண்டிருக்கிறோம். ஆலையில் தீட்டிய‌ வெள்ளை அரிசிக்கும், கோதுமை மாவிற்கும் மாற்று உணவுகளைக் கண்டு அவற்றை உண்பது உடல் நலத்திற்கும் சூழல் நலத்திற்கும் மிக நல்லது. பாதுகாப்பான உணவு என்று சிறுதானியங்களுக்கு மாறும்போது, சிறுதானியங்களில் சுவையான உணவுகள் இருந்தால் மாற்றம் எளிதாகக் கைகூடும். சுவையான உணவுகள் செய்முறையிலும் எளிதாய் இருப்பது நன்று. அவ்வரிசையில் இன்று கேழ்வரகு காரப்புட்டு காண்போம்.

மேலும் படிக்க...»

பறவைகள் -சகி


இந்த‌ மாதம் நாம் அறிந்து கொள்ளும் பறவை பஞ்சுருட்டன். கட்டாலன் குருவி என்றும் அழைக்கப்ப‌டும் இவை பல பறவை ரகங்களை உள்ளடக்கிய ஒரு பறவை இனமாகும். உதாரணத்திற்கு நீளவால் பஞ்சுருட்டன் (Bee-eater), பச்சைப் பஞ்சுருட்டன், செந்தளைப் பஞ்சுருட்டன், காட்டுப் பஞ்சுருட்டன் போன்றவை.இவை பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் சிறு,சிறு வேறுபாடுகள் மூலம் ஒன்றை ஒன்று அடையாளம் காணலாம்.

இப்பறவையினம் விவசாயியின் குலதெய்வம் என்றே கூறலாம். பூச்சிகளில் ஒன்றைக் கூட விட்டுவிடாது. பறந்து, பறந்து அடிப்பான் என்பது போல பறந்து, பறந்து பூச்சிகளைப் பிடிக்கும். பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கும்போது இவை அந்தரத்தில் தலைகீழாய் வட்டமிடும் அழகு இவற்றை எளிதாய் இனம் காட்டி விடும்.

மேலும் படிக்க...»

 

அடிசில் பார்வை - அனந்து

சைவ உணவு நல்லது என்று மாட்டையும், பன்றியையும் காலம் காலமாக தினப்படி உணவில் உண்டு வரும் அமெரிக்கர்கள் உணர்ந்து சொன்னால்தான் நாம் கேட்போம். நம் இந்தியர்களின் தன்னம்பிக்கையும், தங்கள் பாரம்பரிய அறிவின்மேல் உள்ள மதிப்பும் அப்படிப்பட்டது! அந்த வரிசையில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான மிச்சிகன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வை நாம் பார்ப்போம். அப் பல்கலைகழகம், ஒரு ஆய்வறிக்கையில் இப்படி கூறுகிறது: மஞ்சளில் குர்குமின்(curcumin) என்னும் பொருள் உள்ளது. அது நமது ஆரோக்கியதிற்கு மிகவும் முக்கியம்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org