தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஒநாய் அழுகைகள்

சமீப காலமாக நம் மத்திய அரசுக்கு, நம் நாட்டு ஏழைகள் மீது ஏகப்பட்ட கரிசனம் ஏற்பட்டு விட்டது. உதாரணமாக, பலகோடிப் பேர் சாலையோர தட்டுக் கடைகளில்தான் தினப்படி உணவை வாங்கிச் சாப்பிட்டுச் சுகமாகத்தான் இருக்கிறார்கள். குழாயடி நீரைக் குடித்துத்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி யாரும் பெரிதாய் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளை நிரப்பியதாய்த் தெரிவதில்லை. இவ்வளவு ஆண்டுகளாக மக்களின் உடல்நலத்தைப் பற்றியே சிந்திக்காத அர‌சும், அமைச்சர்களும் திடீரென சுத்தமான உணவு தேவை என்று உணவுப் பாதுகாப்பு மசோதாவில் சென்ற ஆண்டு சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதன்படி உணவகங்கள் அடிப்படை சுகாதார நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உணவு விற்பவர்களும் அரசிட‌ம் பதிவு செய்து அனுமதிச் சீட்டு பெற வேண்டும். கரப்பான், எலி போன்றவை உள்ள உணவகங்கள் இழுத்து மூடப்படும்

முழுக் கட்டுரை »

உணவும் உரிமையும் - சரா

சென்ற மாத‌ம் எண்ணையை பற்றிப் பார்த்தோம். செக்குகள் எப்படி அழிக்கப்பட்டன என்றும் இன்றைய ரீஃபைன்டு மோகத்தின் ஆணி வேரையும் அதன் கேடுகளையும் படித்தோம். அதில் கலப்படம் என்பது லேபிலிங் சட்டத்தின் மூலம் எப்படி இயந்திரமய உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தையே மேம்படுத்துவதாக உள்ளது என்பதையும் பார்த்தோம். /a>ப்லென்டிங் (blending) என்ற பெயரில் பாம் ஆயிலும், பருத்தி கொட்டை எண்ணயுமே மிகவும் அதிகமாக நம்மை வந்தடைகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கச்சா எண்ணையை அடுத்துப் பனை எண்ணையே மிக அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது! சென்ற ஆண்டின் (20012-13) மொத்த பனை எண்ணை இறக்குமதி 87 லட்சம் டன்கள் என்கிறது ஒரு அரசாங்க ஆவணம். 80களில் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் டன்கள் வரை இருந்த இறக்குமதி 90களில் 13 முதல் 20 லட்ச‌ங்களுக்கு சென்றது. பனை எண்ணையை மிகவும் அதிகமாக உபயோகிக்கும் கம்பனி பெப்ஸிகோ ஆகும்! எதற்கு? எல்லாம் நாம் ரசித்து ருசிக்கும் லேஸ்,குர்குரே போன்ற பொரித்த உணவுகளுக்குத்தான்!

முழுக் கட்டுரை »

 

சித்தர்களும் தற்சார்பும் - சாட்சி

சென்ற இதழில் இயேசு கிறிஸ்து கூறியவற்றில் தற்சார்பு வாழ்வியல் இழையோடி இருப்பதைக் கண்டோம். இவ்விதழில் இந்து மதமும் தற்சார்பும் என்று எழுதலாம் என்று துவங்கியபோது, அது மூன்று பக்கங்களுக்குள் அடக்க இயலாத ஒரு கடல் என்றும், இந்து மதத்திலேயே சம்கியம், யோகம், நியாய‌ம், வைசேசிகம்,மீமாம்சம், தர்க்கம், லோகாயதம், மாயாவாதம்,வேதாந்தம் என்று எண்ணற்ற எண்ணப் பிரிவுகள் உள்ளன; (நாத்திகமும் ஒரு அங்கம் தான்!) எனவே இதனைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆராய வேண்டும் என்றும் தோன்றியது.

மேலும் படிக்க...»

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org