தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இயற்கை வழி நெல் சாகுபடி - சேதுபதி

இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி செயற்கை வேதி உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் நஞ்சில்லாத நெல் சாகுபடி முறை இப்போது பரவலாகி வருகிறது. தமிழக உழவர் தொழில்நுட்பக் கழகத்தில் இணைந்துள்ள பல்வேறு பண்ணையாளர்கள் இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். அம்முறைகளை இப்போது பார்ப்போம்.

முழுக் கட்டுரை »

மாடல்ல மற்றையவை

மாடுகளுக்கு நாம் உணவு அளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒன்று அது மாட்டிற்கு திருப்தியாக இருக்க வேண்டும், இரண்டு நிறைவாக இருக்க வேண்டும், மூன்று அதன் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். மேலும், மாடுகளுக்கு பழக்க வேண்டாத, செரிக்க இயலாத உணவை தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமான ஊட்டமும் அதன் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும். எனவே, உணவு சரிவிகிதமாக இருக்க வேண்டும். இந்த வரையறைக்குள் நாம் தேர்ந்தெடுக்கும் தீவனம், பெரும்பாலும் நமது பண்ணையிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வாங்க வேண்டி இருந்தாலும் நமக்கு அருகாமையில் கிடைக்கக் கூடியதாகவும், பதப்படுத்தாத, இயற்கையான உணவாக இருப்பதும் அவசியம். (மாட்டுத் தீவன கம்பெனிகள் தயாரிக்கும் தீவனமும் விளையும் பொருட்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. மேலும் படிக்க...»

 

விலை போன விதைகள் - பாமயன்

ஐரோப்பிய நாடுகளில் 1960களிலும் அமெரிக்காவில் 1970களிலும் அறிமுகம் செய்யப்பட்ட விதைச் சட்டங்கள் சிறுகுறு உழவர்களின் கைகளில் இருந்த விதைகளை கும்பணிகளின் கைகளுக்கு மாற்றின. இந்தியாவில் அறிமுகம் செய்து பாதி நிறைவேறிய நிலையில் உள்ள விதைச்சட்டம் முற்றிலும் உழவர்களிடமிருந்து விதையை பறிக்க உள்ளது. இப்போது கூட மறைமுகமான முறையில் விதைகள் உழவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டுவிட்டன. உலகம் முழுமையும் விதைச் சந்தைகளை விரல்விட்டு எண்ணக்கூடிய கும்பணிகளே கைகளில் வைத்துள்ளன. இவர்கள் காப்புரிமைச் சட்டங்களைப் (patent rights) பயன்படுத்தி அறிவுச்சொத்துரிமை (intellectual property rights) என்ற பெயரில் பிறர் யாரும் விதைகளைப் பெருக்கவோ உரிமைத் தொகை கொடுக்காமல் பயன்படுத்தவோ முடியாத வகையில் வைத்துள்ளனர்.

மேலும் படிக்க... »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org