தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்கு உணவு இல்லாத போது

கேழ்வரகு கார புட்டு

ராகி, கேப்பை, Finger Millet என்ற பெயர்கள் பெற்ற கேழ்வரகின் நற்பண்புகளைப் பற்றிப் பலமுறை கண்டிருக்கிறோம். ஆலையில் தீட்டிய‌ வெள்ளை அரிசிக்கும், கோதுமை மாவிற்கும் மாற்று உணவுகளைக் கண்டு அவற்றை உண்பது உடல் நலத்திற்கும் சூழல் நலத்திற்கும் மிக நல்லது. பாதுகாப்பான உணவு என்று சிறுதானியங்களுக்கு மாறும்போது, சிறுதானியங்களில் சுவையான உணவுகள் இருந்தால் மாற்றம் எளிதாகக் கைகூடும். சுவையான உணவுகள் செய்முறையிலும் எளிதாய் இருப்பது நன்று. அவ்வரிசையில் இன்று கேழ்வரகு காரப்புட்டு காண்போம்.

தேவையான பொருட்கள்

 • கேழ்வரகு மாவு - 2 கோப்பை
 • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
 • 2 அல்லது 3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
 • துருவிய தேங்காய்ப் பூ - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு
 • நீர் - தேவையான அளவு
 • எண்ணை - 1 கரண்டி
 • கடுகு - 1 சிட்டிகை
 • மிளகு - 1 சிட்டிகை
 • சீரகம் - 1/2 சிட்டிகை
 • கருவேப்பிலை, கொத்தமல்லி
 • பெருங்காயம் சிறிதளவு

செய்முறை

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவை இட்டுத் தேவையான உப்பைக் கலந்து வர மாவை நன்றாக உப்படன் கலக்கவும். லேசாகத் தண்ணீர் விட்டு ஒட்டியும், ஒட்டாத‌ பதத்திற்குப் பிசிறவும். பின் புட்டுக் குழாயில் இம்மாவை இட்டு ஆவியில் வேக வைக்கவும் (மாறாக இட்டிலித் தட்டில் பிடித்து வைத்தும் ஆவியில் வேக வைக்கலாம்). வெந்த மாவை ஆற விடவும் ஒரு வாணலியில் எண்ணை விட்டு அடுப்பில் வைத்து சாதாரணமாய் உப்புமாவிற்குச் செய்வ‌துபோல் கடுகு, மிளகு போன்றவற்றை வறுத்துப் பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின் மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் ஏற்கனவே வேக வைத்த கேழ்வரகு மாவை இட்டு நன்கு இளக்கி 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். அதன் பின் துருவிய தேங்காய்ப் பூவைத் தூவி சூடாய்ப் பரிமாறவும்.
 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org