தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வாசகர் குரல்


திருச்செங்கோடு நகரம் எப்படி பூமித்தாயின் நீர்வளத்தைக் கொள்ளையாடும் இயந்திரங்களின் தலைநகராக மாறி உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். தங்கள் பணிக்கு நன்றி. மேலும் அதிகமான விவசாயிகளை, நுகர்வோர்களை எழுத ஊக்கிவிக்க வேண்டும். கேள்வி பதில், பேட்டி பகுதிகள் இணைக்க வேண்டும். எதிர்காலத்தில் தாளாண்மையின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது நமக்கு மிகப் பெரிய திருப்தியைத் தரும்! - ப.தி.ராசேந்திரன், மாநில செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம்

தாளாண்மை நடத்துவது கடினமான பணி; தன் காலில் தானே சுட்டுக்கொள்வது போல! உங்கள் பிடிவாதத்தைப் பாராட்டுகிறேன். குமரப்பாவை பெரும்பாலான தமிழ் மக்களே தெரிந்து கொள்ளாத சூழலில் நீங்கள் அவர் கொள்கைகளைப் பரப்புவது நம்பிக்கை அளிக்கிறது. கட்டுரைகள் கனமாகவும், செறிவுள்ளதாகவும் இருக்கின்றன - எனினும் தமிழைக் கொஞ்சம் எளிமையாக்க முயற்சியுங்கள். தமிழ் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் வேறு களங்கள் உள்ளன - தாளாண்மையின் நோக்கம் கிராம சுயராச்சியத்தைப் பரப்புவதாக இருக்க வேண்டும். - ஆர்.டி.ராஜன் -( பொதுவாழ்வில் நீண்ட அனுபவம் உள்ளவர்; பூதான் இயக்கத்தில் திரு வினோபாவுடன் இணைந்து பணியாற்றியவர்).

பல நாட்களாய்த் தாளாண்மை படித்து வருகிறேன். புதிய பதிப்பு நன்றாய் உள்ளது. கட்டுரைகள் பய‌னுள்ள தகவல்களுடனும், படிக்கச் சுவையாகவும் இருக்கின்றன - பி.பி.தாமோதரன், சென்னை

செல்வமணி அவர்களின் கவிதைகளால் தாளாண்மைக்குப் பெருமை. சரளமான நடையும், நேர்த்தியான சொல்லாளலும், கடும் கலைச் சொற்கள் இல்லாத அழகு தமிழும், வார்த்தைச் சிக்கனமும் அவர் கவிதைகளை ஒரு தெளிந்த நீரோடையைப் போல துள்ளிப் பாயச் செய்கின்றன. இயற்கையை அவர் ரசிக்கும் பாங்கு, ஒரு படம் பார்ப்பதுபோல் நம்மையும் அச்சூழலுக்கு இட்டுச் செல்கின்றது. வாழ்த்துக்கள்! - சங்கர்

ஆடித் தாளாண்மையில், இயக்கச் செய்திகளில், விவசாயிகள் தங்கள் பொருளைத் தாங்களே அண்மையில் விற்பனை செய்ய வேண்டும் என்று உழவன் பாலா கூறியுள்ளார். ஏற்கனவே பங்களூரு போன்ற நகரங்களில் இயற்கை உணவு , கடுமையான விலைகொண்டோ அல்லது பழையதாகவோ இருக்கிறது. இது போன்ற சூழலில் அண்மையிலேயெ இயற்கை உணவு விற்றுவிட்டால் நாட்டில் எல்லோருக்கும் பதுகாப்பான உணவு வேண்டாமா? - ரகோத்தமன், பங்களூரு. [கெடுமுன் கிராமம் சேர் என்பது தாளாண்மையின் அடிப்படைக் கொள்கை. பெரு நகர‌ங்களில் வாழ்வதே தவறு என்ற குமரப்பாவின் கொள்கை கொண்ட நாம், அண்மைச் சந்தைகளையும்,உள்ளூர் பொருளாதாரத்தையுமே விரும்புகிறோம். இதனால் நகர‌ங்களில் நல்ல உணவு கிடைக்காவிடில் எல்லோரும் கிராமங்களுக்குத் திரும்புவார்கள். கிராம சுயராச்சியம் சற்று விரைவாய் மலரும்! - உழவன் பாலா ]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org