தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகர் வரிசையில் நாம் காணவிருக்கும் திரு. மணி அவர்களைச் சந்திக்க கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறை எந்த நகரத்திலிருந்தும் புற நகர் பகுதிகளைக் கடக்கும் பொழுது நாம் காணும் அதே மனதைத் தாக்கும் காட்சிகள் - விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவது, புதிய கட்டிடங்களும் குடியிருப்புகளும் வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பது, அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத பலப்பல "நகர்கள்". நம் நாட்டில் ஒரு நகரம் வளருவது என்பது அரக்க வளர்ச்சியாகவே உள்ளது. சூழலைப் பற்றியோ, அங்கு வாழப் போகும் மாந்தரைப் பற்றியோ சிறு சிந்தனை கூடச் செய்யாமல், பணத்தின் மீதுள்ள பேராசை மட்டுமே ஒரே குறியாய் உருவாக்கப்படும் இப்புற நகர்ப் பகுதிகள், பிற்காலத்திற்கு நாம் விட்டுச் செல்லும் செல்வம் அல்ல, துன்பமேயாகும்.

இவ்வாறான எண்ணங்கள் மேலோங்கிய நிலையில் கணுவாய் புற நகர் பகுதியைக் கடந்து நண்பர் மணியின் தோட்டத்திற்குச் செல்லும் பிரிவுச் சாலைக்குள் நுழைந்தோம். அக்குறுகிய சாலை மனதிற்கு இதமளிக்கும் மாற்றத்தைத் தந்தது. இரு மருங்கிலும் தென்னை, பாக்கு மற்றும் வாழைத் தோட்டங்கள் நகரத்துக்கு வெகு அருகிலும் கூட வேளாண்மை இன்னும் வாழ்கிறது என்று நமக்கு உணர்த்தின. சாலையோரத்து மரங்கள் தம் கிளைகளை கோர்த்துக் கொண்டு, இளமாலை வெயில் சிறிதும் சாலையில் செல்வோர் மீது படாமல் அரவணைத்து நின்றன. மூன்று நான்கு கிலோமீட்டர் பயணத்துக்குப் பின், மணியின் தோட்டத்தை அடைந்தோம்.

முழுக் கட்டுரை »

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


மலர் கொத்தி

Tickell's Flower Pecker (or) Pale Billed Flower Pecker (Dicaeum Erythrorhynchos)

தோற்றம்

தேன் சிட்டை விட சிறியது. நிறம் - வெளிர் பச்சையாக இருக்கும். சாம்பல் நிறம் மேல் பகுதியில். சிறகுகள் சாம்பல் நிறத்திலும், உடல் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மூக்கு மங்கலான சிகப்பு நிறத்தில் இருக்கும். ஆண், பெண் ஒரே நிறத்தில் இருக்கும். சீக்.....சீக்..... என்ற குரல் மூலம் அடையாளம் கொள்ளலாம்.

காணும் இடம்

இந்தியா முழுவதும் இவற்றை காணலாம். மாந்தோப்பில், புதர்களில் , சிறிய காடுகளில், அதிக பழங்கள் உள்ள தோப்புக்களில் இவற்றைக் காணலாம்.

முழுக் கட்டுரை »

உணவுப் பாவை - அன‌ந்து


தாளாண்மையிலும் மற்ற நேர்மையான பத்திரிக்கைகளிலும் பெருநிறுவனங்களின் ஊழல்களையும், சூதுகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகையில் பொதுவாக எல்லோரிடத்திலும் எழும் கேள்வி " எல்லாம் சரி, ஆனால் தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்ய இயலும்?" என்பதுதான். ஒரு தனி மனிதராகப் போராடி அமெரிக்காவின் உணவுத் தொழிற்சாலையையே சட்டையைப் பிடித்து உலுக்கிய ஒரு பெண்ணின் கதைதான் நாம் காணப் போவது. உணவுப் பாவை (food babe) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் வாணி ஹரி இந்திய வம்சாவளியில் பிறந்த ஒரு அமெரிக்கப் பெண்மணி.

அமெரிக்க வாழ் இந்திய குடும்பங்களில் வளரும் குழந்தைகளை போலவே நன்கு படித்து நல்ல கல்லூரியினின்று தேர்ச்சி பெற்று நல்ல கார்பரேட் கம்பனி வேலையிலிருந்து, அமெரிக்கர்களை போலவே உண்டு, ஊர் சுற்றி, உடல் பெருத்து, வியாதிகள் பெருக்க, மிகவும் நிலைகுலைந்து, பின் விழித்து, உணவினை நெருக்கமாக, உன்னிப்பாக‌ பார்த்து, நல்லுண‌வினாலேயே தனது வியாதிகளையும், அதிக எடையையும் களைந்து (மற்றவர்களும் பயனடையட்டும் என) அதனைப் பற்றி எழுதி அது மிகப்பிரபலமாக, வேறு உலகத்திற்குத் தள்ளப்பட்டு, இன்று அதையே மிகச்சீராக சிறப்பாக செய்து அந்நாட்டில் நல்ல பாதுகாப்பான உணவிற்கு பாடுபடுகிறார்.

முழுக் கட்டுரை »

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


சாமை மசாலாக் கஞ்சி

தேவையான பொருட்கள்


1. சாமை அரிசி - 1 கோப்பை
2. பாசிப் பருப்பு 1/4 கோப்பை
3. கேரட் - 1
4. பீன்ஸ் - 8
5. பெரிய வெங்காயம் - 1
6. தக்காளி 2
7. முட்டைக்கோஸ் - ஒரு துண்டு
8. புதினா இலைகள் - 15 முதல் 20
9. கொத்தமல்லித் தழை - 2 இணுக்கு ( அனைத்தும் பொடியாக நறுக்கியது)
10. பச்சை மிளகாய் - 2 (இரண்டாக நறுக்கியது)
11. இஞ்சி பூண்டு அரைத்த விழுது - 1 தேக்கரண்டி

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org