தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


சாமை மசாலாக் கஞ்சி

தேவையான பொருட்கள்


1. சாமை அரிசி - 1 கோப்பை
2. பாசிப் பருப்பு 1/4 கோப்பை
3. கேரட் - 1
4. பீன்ஸ் - 8
5. பெரிய வெங்காயம் - 1
6. தக்காளி 2
7. முட்டைக்கோஸ் - ஒரு துண்டு
8. புதினா இலைகள் - 15 முதல் 20
9. கொத்தமல்லித் தழை - 2 இணுக்கு ( அனைத்தும் பொடியாக நறுக்கியது)
10. பச்சை மிளகாய் - 2 (இரண்டாக நறுக்கியது)
11. இஞ்சி பூண்டு அரைத்த விழுது - 1 தேக்கரண்டி

செய்முறை


1. சோறு சமைப்பானில் (cooker) 5 1/2 கோப்பை நீர் விட்டு, தேவையான உப்பைப் போட்டு, அனைத்தையும் அதில் இட்டு இரண்டு முறை ஓசை எழுப்பும் வரை வைத்து எடுக்கவும். ஒரு சொட்டு எண்ணை கூடத் தேவை இல்லை.


2. நன்கு குழைய வெந்ததும் 1/2 கோப்பை தேங்காய்ப் பால் அல்லது பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும் (இது சுவை கூட்ட; விருப்பம்போல் செய்யலாம்).


3. சந்தையில் கிடைக்கும் ஓட்ஸ் கஞ்சியை விட இது நூறு மடங்கு சுவையும் அதிக‌ சத்தும் கொண்ட‌து!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org