தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


மலர் கொத்தி

Tickell's Flower Pecker (or) Pale Billed Flower Pecker (Dicaeum Erythrorhynchos)

தோற்றம்

தேன் சிட்டை விட சிறியது. நிறம் - வெளிர் பச்சையாக இருக்கும். சாம்பல் நிறம் மேல் பகுதியில். சிறகுகள் சாம்பல் நிறத்திலும், உடல் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மூக்கு மங்கலான சிகப்பு நிறத்தில் இருக்கும். ஆண், பெண் ஒரே நிறத்தில் இருக்கும். சீக்.....சீக்..... என்ற குரல் மூலம் அடையாளம் கொள்ளலாம்.

காணும் இடம்

இந்தியா முழுவதும் இவற்றை காணலாம். மாந்தோப்பில், புதர்களில் , சிறிய காடுகளில், அதிக பழங்கள் உள்ள தோப்புக்களில் இவற்றைக் காணலாம்.

உணவு

சிறிய பழங்கள் அதிகம் உண்ணும். பின்னர் கொட்டைகளை மரத்திலேயே எச்சமிடும்.

இனப்பெருக்கம்

மாசி முதல் ஆனி வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். தேன் சிட்டு போலதான் கூடு கட்டும். நார்களையும்,இலைகளையும் கொண்டு சிறிய கூடு கட்டும். 2 முட்டைகள் இடும். ஆண், பெண் இரண்டும் குஞ்சுகளை வளர்க்கும்.

குறிப்பு

மிகச் சிறியதாக இருப்பதாலும், இலைகளிடையே எளிதாய் மறைந்து விடுவதாலும் இவற்றைக் காண்பதற்குச் சற்றுப் பொறுமை தேவை.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org