தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வாசகர் குரல்

புரட்டாசி இதழ் படித்தேன். தலையங்கம் மிக சரியானது. நடவுத் திருவிழாவில் பராம்பரிய நெல் ரகங்களின் விளைச்சல் சுமார் 2 டன் என்பது தவறானது. தொழில்நுட்பம் குறித்தும், மகசூல் குறித்தும் ஒருவரது அனுபவம் நடைமுறைக்கு வராது. பல்வேறு வகையில் பரிசோதித்து முடிவுக்கு வரவேண்டும்.

"கற்பதும் கசடும்" வழிப்போக்கன் கட்டுரை இனிமையாக இருக்கிறது. இருப்பினும் நல்ல நூல்கள், விவாத முறை கல்வி. அனுபவ கல்விதான் சிறப்பானது என்பதை சுட்டிக் காட்டுவது இக்காலத்தில் மிக முக்கியம். வளர்ச்சியை பற்றி எழுத எழுத இந்திய பொருளாதர கொள்கைகள் எவ்வாறு மோசமானது என்பது தெரிய வரும்.

தாளாண்மை தன் கடமையை சிறப்பாக செய்கிறது. இதை உரியவர்களிடம், இதே கருத்து உடையவர்களிடம் விரைவில் சென்றடைய வைப்பதும் ஒன்று சேருவதும் மாற்றத்தை உருவாக்கும்.

தாளாண்மை நல்ல தரமான விதைகளை உருவாக்குகிறது. பின்னால் பலன் கிடைக்கும்.

வாழ்த்துக்களுடன்!


ப.தி. ராஜேந்திரன்,
கலசபாக்கம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org