தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உலகளாவிய மண்வளச் சிக்கல் - பரிதி


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்- குறள்

மண்ணே ஒரு நாட்டின் முதன்மையான சொத்து என்று சொன்னால் கூட மண்ணின் இன்றியமையாமை தெரியவராது; மண்ணே நாட்டின் உயிர் என்பது தான் சரியானது. ஆனால், உலகில் ஒவ்வொரு நாட்டிலும் மண் அரிக்கப்பட்டும் வேறு வகைகளிலும் அழிந்துவருகிறது - ஒன்றிய நாடுகளவையின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகம்.

நல்ல, வளமான மேல் மண் உருவாவதற்கு மிக நெடுங்காலம் தேவை. ஆனால், அதை அழிப்பதற்கும் (மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் கிடைக்காமல்) முடக்குவதற்கும் மிகக் குறுகிய காலமே போதும்! இது நிலத்தடி நீர், அடர்ந்த இயற்கைக் காடுகள், உயிரினப் பன்மயம் ஆகிய அனைத்து இயற்கை வளங்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவு கூர்வோம்! மாந்த இனத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் போதுமான உணவு, நன்னீர் ஆகியவற்றை வழங்குவதற்கும் மனித உடைகளுக்கான இயற்கைப் பொருள்களை உருவாக்குவதற்கும் ஆற்றல் மற்றும் சூழல் மண்டலங்களின் நிலைத்த பாதுகாப்புக்கும் உயிரினப் பன்மயத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் வளமான மண் இருப்பது இன்றியமையாதது. வேளாண்மை, தொல்லியல், நிலவியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சி செய்யும் அறிவியலாளர்கள் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இது குறித்து எச்சரித்துவந்துள்ளனர். இப்போது உலக அளவில் மண் ஆதாரம் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது பரவலாக உணரப்பட்டுவருகிறது. ஆகவே “மண் பாதுகாப்பு” இப்போது பேசுபொருளாக விளங்குகிறது.

முழுக் கட்டுரை »

அடங்காதெழுவோம் அருமைத் தோழா


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 25வது மாநில மாநாடு ஆகஸ்ட் 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் திருச்சியில் நடைபெற்றது. முதல் நாள் ஆயிரக்கணக்கில் தமிழகம் முழுவதும் திரண்ட விவசாயிகள் பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் மாநில தலைவர் S.குணசேகரன் MLA அவர்கள் தலைமையில் பொதுசெயலாளர் வே.துரைமாணிக்கம், தேசிய செயலாளர் அதுல்குமார், அஞ்சான் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் சு.நல்லகண்ணு, இ தா.பாண்டியன் ஆகியோர் விவசாயிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இரண்டாம் நாள் விவசாய பிரதிநிதிகள் 300 பேர் பங்கேற்ற மாநாட்டில் இன்றைய விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் அனுபவங்கள் எதிர்கால போராட்ட முறைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். மறுநாள் கோவை சுற்றுசூழல் ஆர்வலர் ஒசை காளிதாஸ் அவர்களின் மிகச் சிறப்பான சுற்று சூழல் குறித்த இயற்கை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாலை தலைகாவிரி தமிழகன் அவர்களின் கருத்துரை நீர்மேலாண்மை குறித்த விளக்கமாக அமைந்தது. விவசாயிகளுக்கான எதிர்கால கடமையை உணர்ந்து நடைபெற்ற மாநாடு என்பதில் ஐயம் இல்லை. இறுதியாக, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org