தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 25வது மாநில மாநாடு ஆகஸ்ட் 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் திருச்சியில் நடைபெற்றது. முதல் நாள் ஆயிரக்கணக்கில் தமிழகம் முழுவதும் திரண்ட விவசாயிகள் பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் மாநில தலைவர் S.குணசேகரன் MLA அவர்கள் தலைமையில் பொதுசெயலாளர் வே.துரைமாணிக்கம், தேசிய செயலாளர் அதுல்குமார், அஞ்சான் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் சு.நல்லகண்ணு, இ தா.பாண்டியன் ஆகியோர் விவசாயிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இரண்டாம் நாள் விவசாய பிரதிநிதிகள் 300 பேர் பங்கேற்ற மாநாட்டில் இன்றைய விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் அனுபவங்கள் எதிர்கால போராட்ட முறைகள் குறித்து விரிவாக விவாதித்தனர். மறுநாள் கோவை சுற்றுசூழல் ஆர்வலர் ஒசை காளிதாஸ் அவர்களின் மிகச் சிறப்பான சுற்று சூழல் குறித்த இயற்கை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாலை தலைகாவிரி தமிழகன் அவர்களின் கருத்துரை நீர்மேலாண்மை குறித்த விளக்கமாக அமைந்தது. விவசாயிகளுக்கான எதிர்கால கடமையை உணர்ந்து நடைபெற்ற மாநாடு என்பதில் ஐயம் இல்லை. இறுதியாக, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
விவசாயிகளுக்குத் தனி நிதிநிலை அறிக்கை
மானாவரி புஞ்சை பயிர்களை பாதுகாத்தல்
மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுதல்
ஆற்று மணல் கொள்ளையை தடுத்தல்
காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல்
விவசாயிகளுக்கு ஒய்வூதியம் வழங்குதல்
உட்பட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தித் தொகுப்பு
ப.தி.ராசேந்திரன்
மாவட்ட செயலாளர்
திருவண்ணாமலை மாவட்டம்