தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகர் வரிசையில் நாம் சந்திக்கும் நண்பர், கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த இரு இதழ்களில் கண்ட இளைஞர்களைப் போல் வேளாண்மை மட்டுமே இவர் தொழில் அல்ல. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் முதலைமடை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகன் பத்திச்சிறா, நகரத்தில் வேலையோ தொழிலோ தேடாமல், கடுமையாய் 20 வருடங்கள் போராடிக் கிராமத்தில் 100 பேருக்கும் மேல் வேலையளிக்கும் சிறு தொழிலதிபர். அவரது கிராமத்தில் ஒரு சோப்புத் தொழிற்சாலையை வெற்றிகரமாக கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி அவ்வட்டாரத்தில் நிகழும் பல சுற்றுச் சூழல் பாதுகாப்பு செயல்களுக்கு உறுதியான ஆதரவும், வழிநடப்பும் அளிக்கிறார். தொண்ணூறுகளின் தொடக்கத்தில், சில சமூக அக்கறையுள்ள இளைஞர்கள், காந்திஜி யுவ சங்கடனா எனும் அமைப்பில் இருந்து, கிராமப்புறத்தில் ஒரு இயற்கை சோப்பு தயாரிக்கும் தளவாடத்தை, (கிராமப்புற பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்பாகக் கூடும் என்ற நோக்குடன்) பரவலாக்க முயற்சி மேற்கொண்டனர். இதன் தலையாய நோக்கம், வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிறு பொருளாதார ஊக்கமும் தன்னம்பிக்கையும் கிடைக்க வேண்டும் என்பதே. எனினும், சோப்பு தயாரிப்பிற்கு மூலப் பொருள் தொடர்ந்து கிட்டாமை, சோப்பு விற்பனையில் தொய்வு, போதிய தொழில் நுட்பப் பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால், அம்முயற்சி எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

முழுக் கட்டுரை »

விழித்துக் கொள்ளுமா கிரேக்கம்? - அனந்து & பாபுஜி


வரகரிசி சுரை அடை

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான கிரீசு தற்பொழுது கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. நாடே திவால் ஆவது என்பது இப்பொழுது அவ்வளவு அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்லாந்தும், அதன் பின்னர் அயர்லாந்தும் கவிழ்ந்தன. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமே நிர்மூலமாவதும், அவர்கள் மீண்டு எழ முடியுமா என்ற கேள்வியும் இந்த "உலகமயமாக்கல்" மற்றும் "திறந்த பொருளாதாரத்தின்" பரிசுகள். அதற்கு முன் இப்படி நாடுகள் திவாலாவது கேள்விப்படாத ஒன்று . அதன் சிறப்பு எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி இப்படித் திடீர் நெருக்கடியாகத்தான் எல்லா நாடுகளிலும் வந்திருக்கிறது.

கிரீஸின் நெருக்கடியின் தொடக்கம் இப்படித்தான் 2010ல் திடீரென நிகழ்ந்தது. முதல் கடன் என்றுமே எளிதல்லாவா? பன்னாட்டு நிதியம் முதலிய நிதி அமைப்புகள் கிரீசுக்குக் கடன் வழங்கின. பின்னர் 2012லும் பெரும் தொகை எளிதாக‌ அளித்தன. இப்பொழுது சமீபத்தில் மீண்டும் நெருக்கடி வர, பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய நடுவண் வங்கி, ஐரோப்பிய யூனியன் ஆகியன முழித்துக்கொண்டன. கடன் மீட்பதற்கான வழிகளையும் யோசிக்கத்தொடங்கின. கடன் மீட்புத் திட்டம் என்னும் பெயரில் சில நிபந்தனைகளை வலியுறுத்தின, அவர்களை "கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என அழுத்தம் கொடுத்தன.

முழுக் கட்டுரை »

செவிக்குணவு இல்லாத போழ்து - பத்மா


முளைப்பயறுக் கூழ்

பொதுவாக முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுவகைகள் உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றவை. இவற்றில் உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும், நார்ச்சத்தும் மிகவும் அதிகமாக உள்ளன. மேலும் கொழுப்புச் சத்து இல்லாத புரதச் சத்தை இவை அளிப்பதால் இவை மிகச்சிறந்த உணவு என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க இயலாது. பயறு வகைகளில், பச்சைப் பயறு அனைத்திலும் சிறந்தது; ஏனெனில் வாயுத் தொல்லையை உருவாக்காத ஒரு புரத ஊற்றாக இது உள்ளது. இவ்விதழில் பச்சைப் பயறை எவ்வாறு எளிதாக முளைக்கட்டுவது, அதனால் எவ்வாறு கூழ் செய்வது என்றும் காண்போம்.

தேவையான பொருட்கள் 1.முழுப் பச்சைப் பயறு - தேவையான அளவு (100 கிராம் பயறு 400 கலோரிகளைக் கொண்டது. ஒரு ஆளின் ஒரு வேளை உணவுத் தேவையை நிறைவு செய்யக் கூடியது).

2.தயிர் (அ) பால் - விருப்பப் பட்டால்

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org