தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவில் ஒளிக்கப்பட்ட‌ உண்மைகள் - பரிதி


[சென்ற இதழ்த் தொடர்ச்சி]

5. நம் உணவுப் பயிர்களை இனப்பெருக்கம் செய்து காப்பவர் யார்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
150 வகைப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில்
12 வகைகளுக்கே முதன்மைக் கவனம் தரப்படுகிறது (எ.கா. விதை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் செயல்பாடுகளில் 45% மக்காச்சோளத்தின் மீது குவிக்கப்பட்டுள்ளது!)
1960-கள் முதல் 7,000 பயிர் வகைகளில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட
புது இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; (இவற்றில் சில மட்டுமே அழகுச் செடிகள்.)

முழுக் கட்டுரை »

எந்த உழவு இனியது? - பாமயன்


வேளாண்மையில் உற்பத்தித் திறன் என்ற கருத்தாக்கம் மிகவும் முதன்மைப் படுத்தப்படுவதுண்டு. உலக வேளாண்மை வரலாற்றில் மனிதர்கள் தங்களது உழைப்பைப் பயன்படுத்தி தங்களது உணவுத் தேவையை நிறைவு செய்து கொண்டனர். பின்னர் விலங்குகளைப் பயன்படுத்தி உணவு பெறும் நுட்பங்களைப் பெருக்கினர். இப்படியாக வேளாண்மை என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுத்தது. அதன் பயனாக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் வேளாண்மை பேசப்படும் அண்மைக் காலங்களில் ஓர் ஏக்கரில் அல்லது ஓர் எக்டேரில் எவ்வளவு விளைச்சல் எடுக்கப்படுகிறது என்ற கணக்கு முன்வைக்கப்படுகிறது. முன்னர் தேவைக்கான உற்பத்தி என்றபோது இந்தக் கணக்கு முன்வைக்கப்படவில்லை. தனக்கும் தனது அண்டைச் சமூகத்திற்குமான உற்பத்தி நடந்தால் போதுமானது என்ற பார்வை இருந்தது.

ஆனால் வணிகமயமான வேளாண்மைச் சூழலில் இந்தக் கணக்கு மிகவும் முதன்மை பெறுகிறது. இதை உற்பத்தித் திறன் (productivity) என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட இடத்தில் அதிகபட்ச விளைச்சல் எடுப்பவர் சிறந்த உற்பத்தியாளர் என்று கவனிக்கப்படுகிறார். இது ஒரு வகையான ஒப்பீட்டுக் கணக்காகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்ட உழவர்களின் விளைச்சலையும் ஈரோடு மாவட்ட விவசாயிகளின் விளைச்சலையும் ஒப்பிட்டு ஈரோடு மாவட்ட விவசாயிகளின் உற்பத்தி அதிகமாக உள்ளதால் அவர்களது உற்பத்தித் திறன் அதிகம் என்ற முடிவிற்கு வருகின்றனர். அதேபோல இதை நாட்டுக்கு நாடு ஒப்பிட்டுக் கொள்கின்றனர். சீன உழவர்கள் இந்திய உழவர்களைவிட உற்பத்தித் திறன் மிக்கவர்கள். அமெரிக்க உழவர்கள் இன்னும் உற்பத்தித் திறன் மிக்கவர்கள் என்று ஒப்பிடுவார்கள். எடுத்துக்காட்டாக இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நெல் ஒரு எக்டேரில் 3,590 கிலோ விளைந்துள்ளது, சீனாவில் 6,686 கிலோ விளைந்துள்ளது. ஆகவே இந்திய உழவர்களின் வேளாண்மை முறை திறன் குறைந்தது என்று ஒரு கணக்கை முன்வைப்பார்கள்.

முழுக் கட்டுரை »

நல்லூரில் ஒரு சந்திப்பு - உழவன் பாலா


12 ஆகஸ்ட் 2015

நாகை மாவட்டம் வடகோடியில், கொள்ளிடத்திற்குக் கிழக்கே உள்ள ஒரு சிறு கிராமம் நல்லூர். இங்கே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு இளங்கலை வேளாண் மாணவிகள் கிராமம் தங்கிப் பணியாற்றும் (Village Stay Program) திட்டத்தின் கீழ்க் கடந்த 45 நாட்களாக இக்கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் விரிவாக்கப் பணியாற்றி வருகின்றனர். இதன் இறுதி நிகழ்ச்சியாக விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இயற்கை வேளாண்மையைப் பற்றிய அறிமுகம் மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் வழங்குவதற்காக என்னையும், நம் இயற்கை விவசாயி திரு.ஜெயக்குமாரையும் அழைத்திருந்தனர்.

விவசாயிகளைச் சந்திப்பது எப்போதுமே ந‌மக்கு விருப்பமான நிகழ்வானதால் நாங்கள் உடனே ஒத்துக் கொண்டோம். நல்லூர் என்பது தேவாரப் பாடல் பெற்ற தலமான ஆச்சாள்புரத்தை அடுத்தது. திருஞான சம்பந்தர் திருமணம் செய்து கொண்ட ஊர் என்பதால் இதற்குத் திருமண‌ நல்லூர் என்று பெயர் வழங்கிப் பின்னர் அது நல்லூர் ஆயிற்று.

முழுக் கட்டுரை »

பசுமைப் படை - அனந்து


வேளாண்மை என்பது ஒரு மதிப்பிற்கு உரிய தொழிலாக இல்லை என்றால், விவசாயத் தொழிலாளர்களின் நிலைமையோ அதை விடவும் மரியாதை குறைந்ததாகச் சமூகத்தில் இருக்கிறது. வேளாண் தொழிலாளர்களுக்கு என்று ஒரு அமைப்பும், அதை ஒரு சீர்படுத்தப்பட்ட சேவைப் பிரிவாகவும், மரியாதைக்கு உரிய தொழிலாகவும் ஆக்க இயலுமா? ஆம் என்று அழுத்தமாகக் கூறுவது மட்டுமின்றி செயலாக்கியும் காட்டிருக்கிறது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பசுமைப் படை (Green Army) அமைப்பு.

முதல்முறை நான் இதை பற்றி கேள்வி பட்ட பொழுது என் கற்பனைக் குதிரை பறந்தது. நான் ஒரு பெரும் பட்டாளமே இயற்கை வேளாண் முறைகளில் பயின்று, சீரிய இயற்கை வழி பூச்சி மேலாண்மை உட்படக் கையாண்டு பல விவசாயப் பண்ணைகளில் இதனைச் செயலாக்கி , மிராசுதார், வேலையாள் இருவருக்கும் லாபம் உண்டாகும் வகையில் கற்பனை செய்திருந்தேன். ஆனால் திருச்சூரில் இதனை நேரில் சென்று பார்த்த பொழுது இது நம் கற்பனையை எல்லாம் மீறிய சீரியதொரு முயற்சி, சாதனை என்றே புரிந்தது.

நான் சென்ற பொழுது பருவ மழை தொடங்கியிருந்தது. எங்கும் பச்சை நிறம். பசுமையாக ஊரே அழகாக பூசி மெழுகியது போல் ஜொலித்தது. அவ்வப்பொழுது ஒரு சாரல்..எனக்கு அப்பொழுதும் தெரியாது இதெல்லாவற்றையும் விட பெரிய பசுமைப் புரட்சி எனக்கு காத்திருந்தது என்று தெரியாது.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org