குளத்துக் குருவி
White Browed Wagtail (Motacilla Maderas Patensis)
குளத்துக் குருவியின் சிறப்பு அதன் வால்தான். வாலை மேலும் கிழுமாக ஆட்டிக்கொண்டே ஒய்யாரமாக நடக்கும். அக்காலத்தில் துணி துவைப்பவர்களின் கழுதைகளுடன் வாய்க்கால், குளங்களில் இப் பறவைகளை அதிகமாகக் காணலாம் என்று செய்தி. Stuart Baker என்பவர் இப்பறவைகளை அக்காலத்தில் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட சென்னையில் கண்டதால் Motacilla Maderas Patensis என்ற அறிவியல் பெயர் இடப்பட்டது.
தோற்றம்
21 செ.மீ நீளம் . கருப்பு நிறத்தில் உடம்பு, தலை, நெஞ்சு ஆகியவை அமைந்திருக்கும். வெள்ளை நிறத்தில் உடல், கண்ணுக்கு மேல்பகுதி அழகிய வெள்ளைக் கோடு இதன் அடையாளம். வால் நீண்டு ஆட்டிக்கொண்டே நடக்கும். பெண்பறவை சற்று நிறம் மங்கலாக இருக்கும்.
காணும் இடம்
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் இவற்றை காணலாம். மலை பிரதேசம் மற்றும் குளிர் அதிகம் இருக்கும் இடங்களில் குறைவாக இருக்கும். வாய்கால். குளம், குட்டை, நதி ஆகியவற்றின் கரை ஓரங்களில் இவற்றைக் காணலாம்.
உணவு
புழு, பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றை உண்ணும்.
இனப்பெருக்கம்
மழை இல்லாத மாதங்களில்தான் இவை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். கரை ஓரங்களில் உள்ள பாறைகளில் இடையே மரவேர்களின் இடையில் சிறிய குழி அமைத்து கூடு கட்டும். 3 - 4 முட்டைகள் இடும். நீர்வற்றும் வாய்க்கால், குளம் ஆகிய இடங்களில் இவை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். மக்கள் இருக்கும் இடத்தில் கட்டிடத்தின் கூறைகள், மண்டபங்களின் கூறைகளில் கூடு கட்டும்.
[இது முன்னர் large pied wagtail என்று அழைக்கப்பட்டு வந்தது]