தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவில் ஒளிக்கப்பட்ட‌ உண்மைகள் - பரிதி


[சென்ற இதழ்த் தொடர்ச்சி]

5. நம் உணவுப் பயிர்களை இனப்பெருக்கம் செய்து காப்பவர் யார்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
150 வகைப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில்
12 வகைகளுக்கே முதன்மைக் கவனம் தரப்படுகிறது (எ.கா. விதை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் செயல்பாடுகளில் 45% மக்காச்சோளத்தின் மீது குவிக்கப்பட்டுள்ளது!)
1960-கள் முதல் 7,000 பயிர் வகைகளில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட
புது இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; (இவற்றில் சில மட்டுமே அழகுச் செடிகள்.)
1960-கள் முதல் 80,000-க்கும் மேற்பட்ட புது இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன;
இவற்றில் 59% அழகுச் செடிகள்!
புது இனங்களை உருவாக்குவதில் எவ்வகையான வணிகச் செலவுகளும் இல்லை.
மரபீனி மாற்றப் பயிர் ஒன்றை உருவாக்குவதற்கு ஆகும் ஆராய்ச்சிச்
செலவு (சராசரியாக) 857 கோடி ரூபாய்; ஆனால், வளரும் நாடுகளின்
தேவைகளைப் பொருத்தவரை 10-20% மட்டுமே வணிகத் துறையினால் ஈடு
செய்யப்படுகிறது. வணிக அடிப்படையிலான ஆய்வுகளில் பெரும்பங்கு
[மக்காச்சோளம், சோயாபீன்சு போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த] ஒரு சில
பயிர்களைச் சூழல் மாற்றத்தின் தாக்கத்தைத் தாங்கும்வண்ணம் அவற்றின்
இயற்கையான மூலப்பயிர்களுடன் ஒட்டு வைப்பது தொடர்பானவையாகவே உள்ளன.
80-90% விதைகள் வணிகச் சந்தைகளுக்கு அப்பால் இருந்து பெறப்படுகின்றன
50-60,000 வகை இயற்கை மூல இனங்களைப் பயன்படுத்த வழியுண்டு.
இவற்றின் வணிகச் சந்தை மதிப்பு ஆண்டுக்கு 7,24,500 கோடி ரூபாய்!.

6. நம் கால்நடைகளை இனப்பெருக்கம் செய்து காப்பவர் யார்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
மொத்தம் ஐந்தே வகையான கால்நடைகளைப் பயன்படுத்துகிறது; அவற்றில்
நூறுக்கும் குறைவான இனங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.
மொத்தம் 40 வகைக் கால்நடைகளைப் பயன்படுத்துகிறது; அவற்றில்
7,000-க்கும் அதிகமான இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. .
கோழி, வாத்து உள்ளிட்ட வளர்ப்புப் பறவைகள் தொடர்பான மரபீனி
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் செயல்பாடுகளில் 97% நான்கு
பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.ம்
64 கோடி சிறு குறு உழவர்களும் 19 கோடி மேய்ப்பர்களும் உலகிலுள்ள
கால்நடையினங்களின் மரபுப் பன்மயத்தைக் காத்துவருகின்றனர்.
பன்றிகள் தொடர்பான மரபீனி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச்
செயல்பாடுகளில் 65% நான்கு பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில்
உள்ளது.
ஊர்ப்புறங்களில் கால்நடை வைத்திருப்போரில் மூன்றில்
இரண்டு பங்கினர் பெண்கள்
அழிவின் தருவாயிலுள்ள கால்நடை இனங்களின் விகிதம்
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் மிக அதிக அளவில் உள்ளது.
வளரும் நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள்
தம் வருமானத்தில் 33% முதல் 50%-ஐக் கால்நடை வளர்ப்பு மூலம் பெறுகின்றனர்

7. நம் நீர்வாழ் உயிரினங்களைப் போற்றிக் காப்பவர் யார்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
363 வகைக் கடல்வாழ் உயிரினங்களையும் பண்ணைகளில்
வளர்க்கப்படும் 600 இனங்களையும் உணவாகப் பயன்படுத்துகிறது;
அவற்றில் 101 இனப்பெருக்கத் திட்டங்கள் வெறும் 25 வகை
உயிரினங்கள் மீது மட்டும்
கவனஞ்செலுத்துகின்றன.
கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான வகைக் கடல்வாழ் உயிரினங்களையும்
15,000-க்கும் மேற்பட்ட நன்னீர் உயிரினங்களையும் அறுவடை செய்கிறது
வரைமுறையின்றி மீன் பிடிப்பதால் 20% நன்னீர் மீன் வகைகள்
ஒரேயடியாக அழிந்துவிட்டன. கடல்வாழ் மீனினங்களில் 30%-இன் எண்ணிக்கை
பெருமளவு குறைந்துவிட்டது; அவற்றில் 57%-இன்
எண்ணிக்கை மிக மிகக் குறைந்துவிட்டது
சிஉலக மக்களில் ஐவரில் ஒருவர் (சுமார் 150 கோடிப்பேர்) தம்
புரத்தச் சத்துத் தேவைக்கு மீன்களையே முதன்மையாகச் சார்ந்துள்ளனர்.
120 ஆண்டுகளுக்கு முன் பெரும் பைவலைப் படகுகள் பிடித்த
மீன்களின் அளவில் வெறும் 6% மட்டுமே இப்போதைய பைவலைப்
படகுகளுக்குக் கிடைக்கின்றன.
ஊரகங்களில் இந்தத் துறையில் ஈடுபடுவோரைப் பொருத்தவரை சீனாவில்
33%, இந்தோனேசியாவில் 42%, வியட்நாமில் 80% பெண்கள்.

8. கானகத்தில் இருந்து நாம் பெறும் உணவு வகைகளைப் போற்றிக் காப்பவர் யார்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
உலகளாவிய முதல்நிலை மரப் பொருள் வணிகத்தின் மதிப்பு சுமார்
11,71,800 கோடி ரூபாய். ஆனால் மனித இனத்துக்குத் தெரிந்த கானக
உயிரினங்களில் வெறும் அரை விழுக்காடு (450 வகை) உயிரினங்கள் மீது
மட்டுந்தான் ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றுக்காகச்
செலவிடப்படுகிறது.


நடு அமெரிக்காவில் வேளாண்மை மற்றும் தீவனங்களுக்காகக் கடந்த 40
ஆண்டுகளில் 40% இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன.

ப்ரெசீல் நாட்டில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் ஆற்றுப்
பகுதியில் காடுகள் அழிக்கப்பட்ட பரப்பில் 75% நிலங்கள் கால்நடை
வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

வளரும் நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினருக்கு மரப் பொருள்கள் மற்றும் விறகு அல்லாத
தேவைகளுக்காக 80,000 வகை கான்விளைபொருள்கள் முதன்மையானவை


காடுகளும் 'மரம் அருகிய வறண்டுதழைகின்ற வெப்பமண்டலப்
புல்வெளி'களும் உலக உணவுத் தேவையில் 10-15%-ஐ நிறைவு செய்கின்றன.

160 கோடி மக்களுக்குக் காடுகளே வாழ்வாதாரமாக உள்ளன


“முழுமையாகப் பயன்படுத்தப்பெறாத" நிலங்கள் ஆண்டுதோறும் சுமார்
5,67,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களைத் தருகின்றன.


உலக விளைநிலங்களில் பாதியில் குறைந்தது பத்தில் ஒரு பங்கு காடுகள்;
அவை சூழல் காப்பு மற்றும் பசுமைக் குடில் வளிகளை ஈர்த்துச் சேகரிப்பதில்
உயிராதாரமான பங்கு வகிக்கின்றன.

9. பக்குவப்படுத்தப்பட்ட உணவு வகைகள் நமக்கு நலந்தருமா அல்லது தீமை செய்யுமா?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
உணவுப் பொருள் கெடாதிருப்பதற்காகப் பக்குவப்படுத்துவது வேறு. உலகம்
முழுவதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை அறிமுகப்படுத்தி விற்றுக்
கொள்ளை உபரி ஈட்டுவது பெருநிறுவனங்களின் குறிக்கோள். அதற்காக
உணவுப் பொருள்களுடன் பெருமளவு வேதிப் பொருள்களைக் கலந்து
பக்குவப்படுத்துவது இப்போது பரவலாக நிகழ்கிறது. அந்தச் சந்தையின்
மதிப்பு 86,31,000 கோடி ரூபாய்!


1950 முதல் உணவு பக்குவப்படுத்துதல் மிக முனைப்பாகச் செயல்படுத்தப்
படுகிறது. அதன் விளைவாக உணவில் சத்துகள் மிகக் குறைந்துவிட்டன;
உலக அளவில் ஒரே மாதிரியான உணவு வகைகள் பரப்பப்பட்டுள்ளன;
அதன் விளைவாக உணவுப் பன்மயம் ஒழிக்கப்பட்டுவிட்டது; உடல் பருமனாகி;
அதன் விளைவாக நோய்வாய்ப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிவருகிறது.

உள்ளூர் நுகர்வுக்காகவும் விளைச்சல் இல்லாதபோது பயன்படுத்துவதற்காகவும்
உணவு பதப்படுத்தப்படுகின்றது. இயற்கை விளைபொருள்களும் இயற்கை முறைகளுமே
இந்தப் பக்குவப்படுத்தலில் பயன்படுத்தப்படுகின்றன.


[இந்தியா உள்ளிட்ட] வளரும் நாடுகளில் சுமார் 200 கோடி மக்கள்
இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைப் பெரிதும் சார்ந்துள்ளனர்.

10. உலக அளவில் நிலம் யாரிடம் உள்ளது, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

2001-ஆம் ஆண்டு முதல் விளைநிலங்களில் 15%
பெருநிறுவனங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், 2%-க்கும் அதிகமான விளைநிலங்கள்
உயிரெரிபொருள் உற்பத்திக்கெனக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.


பயிரிடுவதற்கு உகந்த நிலங்களில் 70-80% இந்த
உற்பத்தி முறையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் [வேதியுரங்கள் வாயிலாக] 17,600 கோடி
கிலோ ஊட்டச்சத்து நிலங்களில் இடப்படுகிறது; 25,20,000 கோடி
ரூபாய் மதிப்புள்ள 75,00,000 கோடி கிலோ வளமான மண் இழப்பு நேர்கிறது.


78% விளை நிலங்கள் கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.


மொத்த வேதியுரங்களில் 80% இறைச்சிக்கான கால்நடைகளுக்குத்
தீவனங்களை வளர்ப்பதற்குப் பயன்படுகிறது. ஆனால், அதில்
பாதிக்கும் குறைவான அளவு உரங்களே அந்தப் பயிர்களால்
எடுத்துக்கொள்ளப்படுகின்றன.


மொத்த விளைநிலங்களில் 20-30% மட்டுமே இந்த வலையத்தினுள் உள்ளது


அதில் பாதிக்கு மேற்பட்ட நிலங்களில் வேதியுரங்கள்
பயன்படுத்தப்படுவதில்லை. (எ.கா. கலப்புப் பயிர் செய்கையில் வெடியத் தேவையில்
23% கால்நடை உரங்களில் இருந்து கிடைக்கிறது.)


[சிறு குறு உழவர்களின் பாரம்பரிய வேளாண் முறைகளின் விளைவாக]
மண்ணில் உள்ள நுண்ணியிர்கள் ஆண்டுதோறும் 7000 – 14000 கோடி கிலோ
வெடியத்தை பயிர்களின் வேர்களுக்குத் தருகின்றன. இது
567000 கோடி ரூபாய் மதிப்புள்ள வெடிய வேதியுரங்களுக்கு
இணையானது.

11. வேளாண்மை வெளியிடும் பசுமைக் குடில் வளிகளின் அளவை யாரால் குறைக்க இயலும்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்

கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் அளவு 2030-ஆம் ஆண்டு வாக்கில்
மேலும் 60% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


உயிர்ம வேளாண்மையைக் காட்டிலும் வேதி வேளாண்மையில்
ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 255 கிலோ அதிகமாகக்
கரியீருயிரகை ( CO2) வெளியிடப்படுகிறது.


ஆழ்கடலில் மீன்பிடிக்கும் இயந்திரங்கள் தாம் பிடிக்காத
கடல்வாழ் உயிரினங்களையும் பெருமளவில் அழிப்பது மட்டுமன்றி
ஆண்டுதோறும் 29900 கோடி கிலோ கரியத்தை வளிமண்டலத்தில்
வெளியிடுகின்றன.


மீத்தேன் உள்ளிட்ட பசுமைக் குடில் வளிகளை மிகக் குறைந்த அளவே
வெளியிடுகின்றது. (எ.கா. செர்மனியில் உயிர்மவேளாண்மை செய்யப்படும்
நிலங்கள் ஏக்கர் ஒன்றுக்கு 161 கிலோ கரியீருயிரகையை மண்ணுக்குள்
தக்கவைப்பதன் மூலம் பசுமைக் குடில் வளி வெளியீட்டைக் குறைக்கின்றன.)


சிறு குறு உழவர்களின் பாரம்பரிய வேளாண் முறைகளும் உயிர்ம வேளாண்மையும்
ஆண்டுக்கு 1,200 முதல் 3,200 கிலோ கரியத்தைக் கூடுதலாகச் சேமிப்பதன்
மூலம் பசுமைக் குடில் வளி வெளியீட்டை 60% வரை குறைக்கின்றன.


உயிர்ம வேளாண் பண்ணைகள் கரியீருயிரகை வெளியீட்டை 48-60% குறைக்கின்றன.


சிறிய அளவில் மீன் பிடிப்பவர்கள் கடல்வாழ் உயிரினங்களை அழிப்பதில்லை.


(தொடர்ச்சி அடுத்த இதழில்...)

அருஞ்சொற்பொருள், கலைச்சொற்கள், அயல்மொழிப் பெயர்ச்சொற்கள்

அமேசான்.........................................amazon

கரியீருயிரகை ('கரியமில வளி').....................CO2

ப்ரெசீல்..........................brazil

பசுமைக் குடில் வளிகள்...........................green house gases

புரத்தச் சத்து...........................protein

பைவலைப் படகு...............................trawler

மரம் அருகிய, வறண்டு தழைகின்ற, வெப்பமண்டலப் புல்வெளி......................savanna(h)

மரபீனி மாற்றப் பயிர்............................genetically modified crop/plant

மீத்தேன்.........................methane

வெடியம்.....................nitrogen

இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தில் பண மதிப்புகள் அமெரிக்க டாலரில் தரப்பட்டுள்ளன. இந்தத் தமிழாக்கத்தில் ஒரு டாலருக்கு 63 ரூபாய் என்ற கணக்கில் பண மதிப்பைக் காட்டியுள்ளோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org