தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வலைப்பூவில் தாளாண்மை இதழ்களைப் படிக்க , இங்கே செல்லவும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் 32 பக்கங்கள் கொண்ட தாளாண்மை என்ற‌ இதழை நம் இயக்கத்தின் பிரசார பீரங்கியாக வெளியிடுகின்றோம். தனி இதழ் 15 ரூபாய்; ஆண்டுச் சந்தா 150 ரூபாய்.

இயற்கைசார் உயிர்ம வேளாண்மை பற்றிய தொழில் நுட்பக் கட்டுரைகள், தற்சார்பு என்னும் தத்துவ விளக்கக் கட்டுரைகள், காந்தி, குமரப்பா போன்றோரின் எழுத்துக்களும் அவை சார்ந்த விளக்கக் கட்டுரைகள், தமிழகத்தின் நீர் வள ஆதாரங்கள் , மற்றும் பல இயக்கச் செய்திகளும் இதில் இடம்பெறும்.இதை இணைய தளத்தில் இலவசமாகவும் படிக்கலாம்.

ஐப்பசி 2011ல் புதுப்பிக்கப்பட்ட தாளாண்மை இது வரை 15 இதழ்கள் வெற்றிகரமாக அச்சிடப்ப‌ட்டு இம்மாதம் பங்குனி (Mar - April 2013) இதழ் வர இருக்கிறது. விவசாயத்தை மட்டுமன்றித் தற்சார்பு வாழ்வியல் என்ற கோட்பாட்டைப் பரப்பும் இதழாக நம் தாளாண்மை இருக்கிறது. எந்த விளம்பரங்களையும் சாராமல் சுதந்திரமாக நாம் செயல்பட்டு வருகிறோம். வாசகர்கள் தாங்கள் படித்து மகிழ்வதோடன்றிப் பிற நண்பர்களுக்கும் இதைப் பரப்புமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

சந்தா

இணைய தளத்தின் மூலம் சந்தா செலுத்த விரும்புவோர், கீழ்க்கண்ட இந்தியன் வங்கிக் கணக்கில் ரூ.150 செலுத்தி விட்டு santha AT kaani.org என்ற முகவரிக்கு விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பலாம். அடுத்த இதழிலிருந்து உங்கள் முகவரி சந்தாதாரர் பட்டியலில் சேர்க்கப்படும். மற்றவர் சந்தாவை வங்கிக் கணக்கில் சேர்த்து விட்டு, சந்தா கட்டிய தேதி மற்றும் உங்கள் முகவரியைக் குறிப்பிட்டு

தற்சார்பு இயக்கம்,
14 திரிபுர சுந்தரி நகர்,
தென்பாதி,
சீர்காழி - 609111

என்ற முகவரிக்கு ஒரு அஞ்சல் அட்டை அனுப்பலாம். (வெளி நாட்டில் இருப்போர் விமான அஞ்சல் மூலம் பெற விரும்பினால் வருட சந்தா ரூ.550 அனுப்பவும்)

வங்கிக் கணக்கு

Tharchaarbu Iyakkam
Current A/c No: 997067890
Indian Bank ,
Thenpathi Branch, Sirkali
IFSC Code IDIB000S108

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org