தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து...

நுங்கு பாயசம் - சூர்யா

இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு காய்க்கத் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அளிக்கிறது. நுங்கு, பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு செரிமானமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்க வேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே செரிமானமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்

நுங்கு பாயசம்

தேவையான பொருட்கள்

நுங்கு - 6
பால் - 1/2 லிட்டர்
பாதாம் - 6
சர்க்கரை - 1 மேஜை கரண்டி

முதலில் பாதாமை ஒரு மணி நேரம் ஊற வைத்து மையாக அரைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி சர்க்கரை சேர்க்கவும். அதில், அரைத்த பாதாமையும் சேர்க்கவும். இவை நன்கு கலந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்துக் கொள்ளவும். நுங்கை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின், ஆற வைத்த பாலுடன் நுங்கைச் சேர்த்து குளிர்பதனத்தில் வைக்கவும். குளிர்ந்த பின் பரிமாறவும். நுங்கிற்கு பதில் இளநீர் வழுக்கை சேர்க்கலாம். பாலுடன் குங்குமப்பூ சேர்க்கலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org