அக்கரை பார்வை - 11 - அனந்து
கர்நாடகத்தின் பெல்காம் பகுதிக்கு நாம் போகும்போது, இந்த ஆண்டிற்கான முதல் பருவ மழை அப்பொழுது தான் வந்திருந்தது..மற்ற எல்லா இடங்களையும் போல் கால தாமதமாகத்தான் வந்திருந்தது. ஆனால் அதில் ஒரு அதிர்ஷ்டம் நமக்கு. நாம் போகும் வழி நெடுகிலும் பசுமை அதற்குள்..எங்கு நோக்கினும் எருதுகள் கொண்டு உழுது கொண்டிருந்தனர் உழவர்கள். பைல்ஹோங்கள் என்னும் ஊரை தாண்டி பெலவாடி என்னும் கிராமத்திற்கு செல்லும் வழி எங்கும் அழகு..அந்த அழகிற்கு அழகு சேர்த்தன எருதுகள் மற்றும் அவை உழுது இடப்பட்டிருந்த கரும் கோடுகள்- நோக்கும் இடம் எல்லாம்! மொத்தத்தில் இரண்டே இரண்டு ட்ராக்டர் தான் நாம் கண்டது, அந்த பகுதி மொத்தமும், மற்ற எல்லாம் எருதுகளே..கண் கொள்ளாக்காட்சி. நாம் இன்று சந்திக்க போகும் விவசாயப் பெண்மணியின் சிறப்பின் முன் அறிவிப்புகளோ? முழுக் கட்டுரை »