தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சோற்றில் மறைத்த பூசணிக்காய் - வழிப்போக்கன்

மரபீனி விதைகளாலும், அவற்றால் விளையும் உணவுப் பொருட்களாலும் எவ்விதத் தீமையும் இல்லை என்றும், அவை மனிதனுக்குப் பாதுகாப்பானவையே என்றும் மன்சான்டோ நிறுவனமும், பிற உயிரித் தொழில் நுட்ப வல்லுனர்களும், விஞ்ஞானிகளும், தொடர்ந்து கூறி வருகின்றனர். இதை நிரூபிக்க எவ்விதத் தேவையும் இல்லையென்ற நிலைப்பாட்டை அவர்கள் கொள்கின்றனர். என்ன மாயமோ தெரியவில்லை அரசில் உள்ளவர்களும், அதிகாரிகளும், நம் பல்கலைக்கழகங்களும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். நம் நாட்டில் இன்னும் சற்று மேலே போய், உயிரித் தொழில்நுட்பத்தில் மூன்றாம் மனிதர்கள் பரிசோதனையே செய்யக் கூடாது என்று BRAI (Bio Technology Regulatory Authority of India) என்ற சட்ட வரைவைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மரபீனி சோயா மொச்சை மற்றும் மக்காச் சோளம் இதற்கு முன் சோதனை எலிகளுக்குக் கொடுக்கப்பட்டு விளைவுகள் குறிக்கப் பட்டுள்ளன. ஆனால் 90 நாட்களுக்கு மேல் எந்த சோதனையும் செய்யப்படவில்லை. தற்போது பிரான்சு மற்றும் இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபீனி மக்காச்சோளத்தை வெள்ளெலிகளுக்கு உணவாகக் கொடுத்து இரண்டாண்டுக் காலம் ஒரு பரிசோதனை நடத்தினர். கடந்த மாதம் (02 ஆகஸ்ட் 2012) வெளியிடப்பட்ட அம் முடிவுகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவையாக உள்ளன. ரவுண்டப் என்னும் களைக்கொல்லி கொண்டு விளைவிக்கப் பட்ட மக்காச்சோளத்தை இரண்டு ஆண்டுகள் எலிகளுக் கொடுத்து ஆராய்ந்ததில் பின்வருமாறு கண்டனர்:

மரபீனி சோளத்தை உணவாக உட்கொண்ட பெண் எலிகள், சாதாரண சோளத்தை உண்ட எலிகளை விட 2-3 மடங்கு அதிக வேகமாக இறந்தன. மார்பகப் புற்று நோய் பெரும் அளவில் காணப்பட்டது (பார்க்க படங்கள்). ஆண் எலிகளில், கல்லீரல் அடைப்பும், நெக்ரோசிஸ் என்னும் திசு அழுகல் நோயும் 5 மடங்கு அதிகமாகக் காணப்பட்டன. சிறுநீரக அழற்சி (nephropathy) தீவிரமாகக் காணப்பட்டது. சிறுநீரகப் புற்று நோயும் ஏற்பட்டது. எனவே மரபீனி உணவுகள் பாதுகாப்பானவை அல்ல என்று சந்தேகமின்றி நிரூபணம் ஆகிறது.

இது நாள் வரை சோற்றில் மறைக்க முயற்சித்த முழுப் பூசணி வெளிச்சத்திற்கு வ‌ருகிறது! நம்மைச் சோதனை எலிகளாக்க நம் அரசுக்கும், விஞ்ஞானிகளுக்கும் யார் அனுமதி அளித்தது?

பாதுகாப்பான உணவு நம் உரிமை என்று குரல் கொடுக்க விரும்புவோர் www.indiaforsafefood.in என்ற ASHA அமைப்பின் வலைத் தளத்தில் மனு அனுப்பலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org